வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

28 வயது இளம் நடிகையை 2ம் திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகர்.. அதிர்ஷ்டசாலி பாஸ் நீங்க

சுசித்ரா ஆடியோ ஜாக்கியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு பின் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானார். சுசித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சுசித்ரா வைல்ட் கார்ட் என்ட்ரியில் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, தெய்வத்திருமகள் உள்பட சில தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கார்த்திக் குமார் தற்போது ஸ்டாண்ட் அப் காமடியனாக மேடை நிகழ்வுகள் நடத்தி வருகிறார்.

சுசித்ரா, சோசியல் மீடியாவில் தேவை இல்லாத சர்ச்சைகளை கிளப்பி பல சிக்கலில் மாட்டிக்கொள்வார். அதோடு இவர் பல பேருடன் தொடர்பில் இருப்பதாகவும், மன அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதனால் அவருடைய கணவர் சுசித்ராவிடம் இருந்து தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

karthik kumar
karthik kumar

இதனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.இந்நிலையில் கார்த்திக் குமார், நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

karthik-kumar-marriage
karthik-kumar-marriage

நடிகை அம்ருதா சீனிவாசன் மேயாத மான், தேவ் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். இவர்களது திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை வினோதினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதைப் பார்த்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நடிகர் கார்த்திக் குமார்,அம்ருதா ஸ்ரீனிவாசன் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News