திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெற்றிமாறன் பேச்சை கேட்டிருக்க வேண்டும்.. இப்போ வருத்தப்படும் கார்த்திக் நரேன்

வெற்றிமாறன் ஒரு முறை சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டதால் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதாக கார்த்திக் நரேன் சமீபத்தில் கூறியுள்ளது பலரையும் என்னவென்று யோசிக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பெயருக்கேற்றபடி எடுக்கும் அனைத்து படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார். இதுவரை தோல்வியே சந்திக்காத இயக்குனரும் இவர்தான்.

அடுத்ததாக சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் இளம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரும்பி பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து வெளியான மாபியா திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

அந்த படத்தை எதனால் எடுத்தேன், என்ன சூழ்நிலை என்பதை பகிர்ந்து கொண்டார். துருவங்கள் பதினாறு வெற்றி பெற்றவுடன் எடுக்கப்பட்ட நரகாசுரன் படம் ரிலீஸ் தள்ளிக்கொண்டே சென்றதால் எப்படியாவது ஒரு படம் கொடுத்துவிட வேண்டும் என அவசர அவசரமாக உருவாக்கிய மாபியா திரைப்படம் தோல்வியை தழுவியது என்றார்.

அந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்னால்தான் வெற்றிமாறன் ஒரு அறிவுரையை கொடுத்திருந்தார். படம் எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடக் கூடாது, ஒரு படம் லேட்டானாலும் தரமான படமாக கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் அதை நான் பின்பற்றவில்லை, இதனால் தோல்வியை சந்தித்து விட்டேன் எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார் கார்த்திக் நரேன். கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிக்கும் D43 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

karthik-naren-cinemapettai
karthik-naren-cinemapettai

Trending News