ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

4 வருடமாக கோமாவில் கிடக்கும் கார்த்திக் நரேன் படம்.. அடக்கம் பண்ணிய பிரபல இயக்குனர்

துருவங்கள் பதினாறு என்ற சூப்பர்ஹிட் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கார்த்திக் நரேன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷை வைத்து D43 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான துருவங்கள் பதினாறு மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியவர் தான் கார்த்திக் நரேன். யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் இரண்டாவது படமாக கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவான படம்தான் நரகாசுரன். அரவிந்த்சாமி, ஆத்மிகா, சந்தீப் கிஷன் போன்றோர் நடிப்பில் உருவான அந்த படம் ரிலீசுக்கு ரெடியான சமயத்தில் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியது.

கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்த பல படங்களுக்கும் இதே கதிதான். இது சம்பந்தமாக கார்த்திக் நரேன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் எழுந்தது. கார்த்திக் நரேன் நேரடியாகவே கௌதம் மேனனை சமூக வலைதளங்களில் தாக்கி பேசி வந்தார்.

இப்போதைக்கு நரகாசுரன் படம் வருமாறு தெரியவில்லை என அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து மாபியா என்ற படத்தை இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் தனுஷ் தன்னுடைய படத்திற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நரகாசுரன் படத்தை பற்றிய நல்ல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நரகாசுரன் திரைப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் OTT ரிலீஸுக்கே தராத கௌதம் மேனன் தியேட்டருக்கு மட்டும் தந்து விடுவாரா என கிண்டல் செய்கிறார்களாம் கோலிவுட் வாசிகள்.

naragasooran-cinemapettai
naragasooran-cinemapettai

கௌதம் வாசுதேவ் மேனன் நரகாசுரன் படத்திற்கு சங்கு ஊதி விட்டார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். ஆனால் கார்த்திக் நரேன் வட்டாரத்தில் கண்டிப்பாக இன்னும் சில மாதங்களில் நரகாசுரன் வெளியாகிவிடும் என தீர்க்கமாக இருக்கிறார்களாம்.

Trending News