தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் சிலரே இருக்கின்றனர். அந்த வகையில் தான் எடுக்கும் படத்துக்கு ஹீரோ முக்கியம் இல்லை என்பதை படத்திற்கு படம் நிரூபித்து வருபவர் கார்த்திக் நரேன்.
துருவங்கள் பதினாறு, நரகாசுரன், மாபியா போன்ற மூன்று படங்களை எடுத்துள்ளார் கார்த்திக் நரேன். இதில் துருவங்கள் பதினாறு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதிலும் அந்த கதையில் அமைந்திருந்த சஸ்பென்ஸ் அனைவருக்குமே பிடித்திருந்ததால் படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி.
அதனைத் தொடர்ந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவான நரகாசுரன் திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால் அருண்விஜய்க்கு அவசர அவசரமாக ஒரு மாஸ் கதையை உருவாக்கி அதில் மண்ணை கவ்வினார் கார்த்திக் நரேன். அதன் பிறகு கூட மாபியா படம் எனக்கே பிடிக்கவில்லை என ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் மாறன் படத்தின் வெளியீடு இருக்கும் என்பது தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அதர்வாவுக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்துள்ளாராம் கார்த்திக் நரேன்.
அதர்வாவும் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்னமும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதி கொண்டிருக்கிறார். அவருக்கு கண்டிப்பாக கார்த்திக் நரேன் படம் கைகொடுக்கும் என நம்பலாம்.
![atharvaa-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/atharvaa-cinemapettai.jpg)