தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தால் இருவருக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதன் காரணமாக தனுஷ் நடவடிக்கைகள் எதுவுமே கார்த்திக் சுப்புராஜுக்கு திருப்தியளிக்கும் வகையில் இல்லையாம்.
மாஸ்டர் பட வெளியீட்டின்போது தனுஷ் ஜகமே தந்திரம் படமும் இதே போல் தியேட்டர்களில் கொண்டாடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் நெட்பிளிக்ஸ் தளத்தில் விலை பேசி முடித்துவிட்டார்.
இது தனுஷுக்கே தெரியாதாம். இதைக் கேள்விப்பட்ட தனுஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ஜகமே தந்திரம் படத்தின் மீது அதிருப்தியில் இருப்பதை வெளிக்காட்டினார். இதன் காரணமாக தற்போது வரை ஜகமே தந்திரம் படத்தின் டீசரை தனுஷ் பகிர்ந்து கொள்ளவில்லை.
தனுஷ் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே உள்ள பஞ்சாயத்தால் தனுஷ் நடந்து கொள்ளும் விதம் கார்த்திக் சுப்புராஜுக்கு திருப்தி அளிக்கவில்லையாம். என்னதான் சண்டையாக இருந்தாலும் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை கூட பகிர்ந்து கொள்ளவில்லையே என வருத்தப்படுகிறாராம்.
மேலும் தனுஷ் தியேட்டரில் வெளியாகும் கர்ணன் படத்திற்கு நாளுக்கு நாள் அப்டேட் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் ஜகமே தந்திரம் படத்தை பத்து பைசாவுக்கு கூட மதிக்கவில்லை என தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் புலம்பித் தள்ளுகிறாராம்.
மேலும் தனுஷ் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இருந்தாலும் முதலில் கர்ணன் படம் தான் ரிலீஸ் என்பதால் அதில் கவனம் செலுத்துவதாக தனுஷ் வட்டாரங்களிலிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜகமே தந்திரம் ரிலீஸின்போது கண்டிப்பாக தனுஷ் உதவி செய்வார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.