திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

காஷ்மோரா பிரம்மாஸ்திரத்தை மீண்டும் கையில் எடுக்கும் கார்த்தி.. இந்த வாட்டி தேறுவாரா?.

சமீபகாலமாக நடிகர் கார்த்தி நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்து வருகின்றன. அதற்கு சான்றாக கைதி படத்தை கூறலாம். அன்றுவரை விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றோர் மட்டுமே 100 கோடி வசூல் செய்பவர்கள் என்ற பிம்பத்தை நொறுக்கி வசூல் நாயகனாக மாறினார்.

இத்தனைக்கும் அந்த படத்தில் கதாநாயகி கிடையாது. அதுமட்டுமில்லாமல் பாடல்களே கிடையாது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். இன்றைக்கு தமிழ் சினிமாவில் உருவாகும் திரைப்படங்களில் குறைந்தது 4 பாடல்களாவது இருந்துவிடுகிறது. ஆனால் ஹீரோயின் இல்லை, பாடல் இல்லை என்றதுமே படம் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வசூலில் சக்கை போடு போட்டது.

மேலும் கார்த்தி தற்போது சுல்தான் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் நடிகை ரஷ்மிகா மந்தனா முதன் முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக உள்ளார்.

அதனைத் தொடர்ந்து கார்த்தி தற்போது இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய மித்ரன் என்பவரின் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். கார்த்தி கடைசியாக இரட்டை வேடத்தில் நடித்து வெளியான காஷ்மோரா திரைப்படம் வசூலில் சாதிக்க வில்லை.

karthik
karthik

மேலும் காஷ்மோரா படத்தைப் போலவே திகில் கலந்த கதையாக இந்த படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இரும்புத்திரை என்ற வெற்றி படத்தை கொடுத்த மித்ரன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோ என்ற தோல்வி படத்தை எடுத்தார்.

இந்நிலையில் மித்ரன் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கண்டிப்பாக இந்த படம் மிரட்டலாக இருக்கும் என இப்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. எப்படியோ தியேட்டர்ல வந்தா சரி .

Trending News