ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரம்மாண்டத்திற்கு ஆசைப்பட்ட கார்த்திக்.. மிஞ்சியது என்னமோ அவமானம் மட்டும் தான்

90களில் பிரபல ஹீரோவாக வளர்ந்து வந்த நவரச நாயகன் கார்த்திக் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் ஒரு சில படங்களில் கௌரவ வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கார்த்திக் பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என நினைத்த காரியத்தை அவருடைய மகன் நடிகர் கௌதம் கார்த்தியால் செய்ய முடியாமல் போனது. கடைசியில் அவருக்கு மிஞ்சியது அவமானம் மட்டும்தான்.

அதாவது சினிமாவை பொருத்தவரையில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறுவது ஒன்றும் புதிதல்ல. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பூர்ணிமா-பாக்யராஜ் இப்படி பல ஜோடிகள் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

Also Read: நல்ல வாய்ப்பு கிடைத்தும் கௌதம் கார்த்திக்கு ஓடாத 5 படங்கள்.. அப்பா அளவிற்கு வளர முடியாமல் போன துரதிர்ஷ்டம்

அந்த வரிசையில் நடிகர் கார்த்திக்கின் வாரிசான கௌதம் கார்த்திக் நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகனை நவம்பர் 28ஆம் தேதி பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துள்ளார்.  இவர்கள் இருவரும் முத்தையா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.

கௌதம் கார்த்திக் திருமணத்திற்கு வெறும் 250 பத்திரிக்கையாளர்களை மட்டுமே அழைத்து திரை வட்டாரத்தை ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினிமாவில் கொடிகட்டி பறந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கின் திருமணத்தில் யார் யார் கலந்து கொண்டனர் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து ஆர்வத்துடன் பார்க்க நினைத்தபோது அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமாக இருந்தது.

Also Read: 3 ஆண்டு வெறித்தனமான காதல்.. திருமண கோலத்தில் டிரெண்டாகும் புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சுமா, கௌதம் ஜோடி

ஏனென்றால் கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் இருவரின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மிக நெருங்கிய வட்டாரத்தோடு மட்டுமே திருமணம் நடைபெற்றது. இருப்பினும் சினிமா பிரபலங்களை அழைத்து விமர்சையாக நடத்த முடிவு செய்த கார்த்திக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது.

கௌதம் கார்த்திக் திருமண ரிசப்ஷனுக்கு சினிமாவின் பெரிய தலைகளை அழைக்க முடிவு செய்து கார்த்திக்கிடம் சொல்ல, அவர் முடியாது என்று முகத்தில் அடித்தது போல் மகனிடம் கூறிவிட்டார். அத்துடன் மகனின் காதல் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன கார்த்திக், தன்னுடைய மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஆசைப்பட்ட நிலையில் அந்த விஷயத்தில் இவர் பெரும் ஏமாற்றத்தை சந்தித்திருப்பதாக மனம் உடைந்து காணப்படுகிறார்.

Also Read: வைராக்கியத்துடன் சாதித்துக் காட்டிய இரண்டு ஹீரோக்கள்.. செட்டே ஆகாது என்று ஒதுங்கிய கார்த்திக், பிரபு

Trending News