சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

சந்தியா ராகம் சீரியலில் கதிர் மீது மொத்த கோபத்தையும் காட்டிய கார்த்திக்.. புருசனை நினைத்து தவிக்கும் தனம்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், கார்த்திகை பார்த்தும் என்னால் அவனை போலீஸிடம் ஒப்படைக்க முடியாமல் போய்விட்டது. என்னை ஏமாற்றி அவன் தப்பித்து விட்டான் என்று மாயா மற்றும் ஜானகிடம் கதிர் வந்து சொல்கிறார். அதற்கு ஜானகி தொடர்ந்து நம்முடைய கண்ணில் கார்த்திக் மாட்டிக்கொள்வதால் கூடிய சீக்கிரத்தில் அவனுடைய விஷயங்கள் எல்லாம் வெளிவந்து விடும்.

அப்படி மட்டும் செய்துவிட்டால் நம் குடும்பத்தின் மீது இருக்கும் கெட்ட பெயர் நீங்கிவிடும் என்று மாயா சொல்கிறார். அதன்படி மாயா மற்றும் கதிர், கார்த்திகை கண்டுபிடித்து விடுவோம் என்று தீர்மானமாக ஜானகிடம் வாக்கு கொடுக்கிறார்கள். அடுத்ததாக தனம் காலில் போட்டிருந்த ஒத்த கொலுசு காணவில்லை என்று வீடு முழுவதும் தேடுகிறார்.

உடனே ரகுராம் என்ன தேடுகிறாய் என்று கேட்கிறார், என்னுடைய கொலுசு காணவில்லை வெளியே போயிருக்கும் போது தான் தொலைந்திருக்கும் நான் பஸ் ஸ்டாண்டு வரை போய் பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு ரகுராம் இந்த நேரத்தில் போக வேண்டாம் அப்படியே போனாலும் அந்த இடத்தில் கொலுசு இருக்குமா என்பது சந்தேகம்தான் அதனால் விடு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

உடனே தனம் அது நீங்க எனக்கு ஆசை ஆசையாக பிறந்தநாளுக்கு வாங்கி கொடுத்த கொலுசு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று சொல்கிறார். ரகுராம் நாளைக்கு நானே உனக்கு கொலுசு வாங்கி தரேன் இப்பொழுது போய் தூங்கு என்று அனுப்பி வைத்து விடுகிறார். இதனால் தனம் முகம் வாடி விடுகிறது. இதையெல்லாம் பார்த்த கதிர், தனம் சோகமாக இருப்பதை பார்த்ததும் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் வரை போய் கொலுசை கண்டுபிடித்து தனம் தூங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் வைத்து விடுகிறார்.

பிறகு காலையில் தனம் பார்த்ததும் அந்த கொலுசு கிடைப்பதும் சந்தோஷப்பட்டு போகிறார். உடனே இந்த கொலுசை தேடிப் பிடித்து நம்மிடம் சேர்த்தது கதிர் தான் என்றும் தெரிந்து விடுகிறது. அடுத்ததாக தனம் கோவிலுக்கு கிளம்பிய நிலையில் வீட்டில் யாரும் இல்லை என்று தனியாக போக தயாராகி விட்டார். இருந்தாலும் கதிரின் பைக் வெளியே இருப்பதை பார்த்ததும் தனத்துக்கு கதிருடன் சேர்ந்து போக வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.

ஆனாலும் நாம் எப்படி கேட்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது கதிர் நீ தனியாக எங்கும் போக வேண்டாம் கார்த்திக் வெளியே தான் சுற்றி கொண்டிருக்கிறான். தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம் நானே உன்னை டிராப் பண்ணுகிறேன் என்று சொல்லி பைக்கில் கூட்டிட்டு போகிறார். அப்படி போகும் பொழுது கார்த்திக் அனுப்பிய அடியாட்கள் கதிரிடம் வம்பு பண்ணி கதிரை அடித்து விடுகிறார்கள்.

உடனே தனம் கதிரை ஆஸ்பத்திரியில் சேர்த்து கதிர்காக பரிதவிக்கிறார். பிறகு கதிரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த நிலையில் பக்கத்திலேயே இருந்து எல்லா பணிவிடைகளையும் பார்த்து கதிர் மீது மொத்த பாசத்தையும் கொட்டும் விதமாக மனதில் இருக்கும் காதலையும் வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் இவர்களுடைய லவ் ட்ராக் வெற்றிகரமாக சேரப்போகிறது. இதனைத் தொடர்ந்து சீனு ரீஎன்ட்ரி ஆகிறார். இவரும் மாயாவை புரிந்து கொண்டு உண்மைகளை தெரிந்து கொள்ள போகிறார்.

Trending News