வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சந்தான பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்.. இணையத்தில் பட்டாசு வெடித்த ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் டாக்டர் இப்படத்தினை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீபத்தில் கூட அட்லியின் உதவி இயக்குனரான சிபிச்சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் காலேஜ் நாயகனாக நடிப்பதால் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

டான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்த படத்திற்கான வேலைகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்தானத்தை வைத்து டிக்கிலோனா எனும் படத்தை இயக்கிய கார்த்திக் யோகியுடன் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

karthik yogi
karthik yogi

கார்த்திக் யோகி சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப்போக உடனே ஓகே சொல்லியதால் விரைவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.

Trending News