திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவன மூலம் உருவாகியுள்ள விருமன் படம் வெளியாகி சமீபத்தில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் கார்த்தியின் விருமன் படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் வசூலை வாரி குவித்து வருவதால் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக விருமன் படத்திற்கு ப்ரமோஷன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Also Read : குவாட்டர், கோழி பிரியாணி, 8 கோடி வசூல்.. கேவலமான வேலை செய்த தேசிய விருது தயாரிப்பாளர்!

மதுரை தொடங்கி வெளிநாடு வரைக்கும் கார்த்தி இப்படத்தின் பிரமோஷனுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சில யூடியூப் சேனல்கள் மற்றும் ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்திருந்தார். ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கார்த்தியின் மோஸ்ட் பேவரட் படம் எது என்று கேட்டிருந்தார்.

அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் கார்த்தி துள்ளாத மனமும் துள்ளும் என்ற கூறினார். விஜய் நடிப்பில் 1999-ஆம் ஆண்டு வெளியாகி அந்த ஆண்டில் வசூல் சாதனை படைத்த படமாக துள்ளாத மனமும் துள்ளும் படம் அமைந்தது. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

Also Read : தனிக்காட்டு ராஜாவாக விருமன் படத்தின் 7வது நாள் வசூல் விவரம்.. தும்சம் செய்ய வந்த திருச்சிற்றம்பலம்

அதில் பேசிய கார்த்தி இதில் உள்ள அனைத்து பாடல்களுமே தனக்கு பிடித்தது என கூறியிருந்தார். இந்நிலையில் தொகுப்பாளர் விஜய்யிடம் இதை சொன்னது உண்டா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கார்த்தி, விஜய்யின் ரசிகர்களில் ஒருவராக அவரையும், படத்தையும் தூரத்திலிருந்து ரசிக்க மட்டுமே விரும்புகிறேன் என கூறினார்.

தனது அப்பா, அண்ணன் எல்லோரும் சினிமா துறையில் இருந்த போதும் கார்த்தி ஈகோ இல்லாமல் விஜய் படம் பிடிக்கும் என்று பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் கார்த்தி பேசிய இந்தவீடியோ விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read : 13 வருட தீராத பகை.. தளபதி விஜய்யை மொத்தமாக வச்சு செய்த ஏவிஎம் வாரிசு

Trending News