Karthi – Japan : கார்த்தி-க்கு சமீபத்தில் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்றால் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருந்தாலும் வந்தியதேவனாக அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருந்தது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் உருவான ஜப்பான் படம் வெளியாகி இருந்தது. ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இந்த படம் திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. கண்டிப்பாக கார்த்திக்கும் இந்த படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் ஜப்பான் படத்தில் கார்த்தியின் நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக நடித்து முடித்தார். ஆனால் திரைக்கதை மற்றும் ஸ்க்ரீன் பிளே ஆகியவற்றில் ஜப்பான் படம் சொதப்பலை சந்தித்தது. போதா குறைக்க ஜப்பானுக்கு போட்டியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read : சப்புன்னு போன ஜப்பான், சில்லுன்னு கூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்தியை வெறுப்பேத்தும் ஆசாமி
இதனால் ஜப்பான் படத்திற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். இந்த சூழலில் தற்போது வரை ஜப்பான் படம் 30 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்தியின் மார்க்கெட் தற்போது அதல பாதாளத்திற்கு சென்று இருக்கிறது.
மேலும் இதற்கு முன்னதாக கார்த்தியின் கேரியரில் பிளாப் படம் எடுத்துக் கொண்டால் அது தேவ். ஏனென்றால் கார்த்தியின் படங்கள் ஓரளவு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் லாபத்தை பெற்று கொடுத்துவிடும். இப்போது ஜப்பான் படம் 30 கோடி நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் இப்படத்தின் சாட்டிலைட் உரிமை வாங்க யாரும் முன் வரவில்லை. கார்த்தி படத்திற்கு இப்படி ஒரு நிலைமை என்று இப்போது கோலிவுட் சினிமாவே ஆச்சரியப்படும் அளவுக்கு ஜப்பான் மோசமான அடி வாங்கி இருக்கிறது. இதை ஈடுகட்ட கைதி 2 மூலம் கார்த்தி தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.