ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மெய்யழகனுடன் கூட்டணி போடும் சர்ச்சை இயக்குனர்.. அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் கார்த்தி

Karthi : கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான மெய்யழகன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அரவிந்த்சாமி, கார்த்தி காம்போ திரையில் பார்க்க அமோகமாக இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து கார்த்தியின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் எக்கச்சக்க படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவரது கைவசம் அரை டஜனுக்கும் அதிகமாக படங்கள் இருந்து வருகிறது. இந்த சூழலில் இப்போது சர்ச்சை இயக்குனருடன் கார்த்தி கூட்டணி போட்டிருக்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் சமீபத்தில் வாழை படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ஓடிடியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இப்போது மாரி செல்வராஜ் அடுத்ததாக கார்த்தியுடன் கூட்டணி போட இருக்கிறார். எப்போதுமே இவருடைய படங்கள் சர்ச்சையாவது வழக்கம்.

கார்த்தியின் அடுத்த பட அப்டேட்

இந்நிலையில் கார்த்தியுடன் உடன் இவர் இணைந்திருக்கும் கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் கார்த்தி வெங்கட் பிரபுவின் பார்ட்டி, பிஎஸ் மித்ரனின் சர்தார் 2, நலன் குமாரசாமியின் வா வாத்தியார் ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.

இது தவிர அடுத்த ஆண்டு தமிழ் இயக்கத்தில் கார்த்தியின் 29 ஆவது படம் உருவாக இருக்கிறது. அதோடு 2025 இல் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். இதில் கார்த்தி உடன் இணைந்து சூர்யாவும் நடிக்க இருக்கிறார். விக்ரம் படத்தில் இடம் பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு அடுத்த இரண்டு வருடங்களுக்கு மிகவும் கார்த்தி பிஸியாக இருக்கிறார். இப்போது மாரி செல்வராஜின் படத்திலும் கார்த்தி ஒப்பந்தமாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

படு பிஸியாக இருக்கும் கார்த்தி

Trending News