ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பருத்திவீரன் கார்த்தி கையில் இருக்கும் 3 அட்டகாசமான பார்ட் 2 படங்கள்.. லியோ மாதிரி சொதப்பாமல் இருப்பாரா லோகேஷ்?.

Karthi’s Upcoming Part 2 Films: சினிமாவில் சிவக்குமாரின் மகனாக அறிமுகமான வாரிசு நடிகர் கார்த்தி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதிலும் இவர் அறிமுகமாக பருத்திவீரன் படம் சமீபத்தில் ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பியது.

இந்த சூழலில் அடுத்த வருடத்தில் கார்த்தி நடிப்பில் வரவிருக்கும் மூன்று பார்ட் 2 படங்கள் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதன் பிறகு கைதி 2 எப்போது என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் லோகேஷின் எல்சியூ கான்செப்டில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பயங்கர சொதப்பலாக அமைந்துவிட்டது. அதிலும் இந்த படத்தின் செகண்ட் ஆப் மொக்கையாக இருந்தது. லியோ போல் கைதி 2 ஆகிடக்கூடாது என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Also Read: தலைவனுக்கு உண்டான தகுதியை இழந்த விஜய்.. 48 மணி நேரம் கழித்து வெளியான அறிக்கையால் வெடித்த சர்ச்சை

கார்த்தி கையில் வைத்திருக்கும் பார்ட் 2 படங்கள்

இதன் தொடர்ச்சியாக எச் வினோத் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ஆக்சன் திரில்லர் படமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் போலீஸ் ஆபீசராக கார்த்தி கச்சிதமாக பொருந்தி நடித்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்த வருடம் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான உளவாளி க்ரைம் திரில்லர் படமான சர்தார் படம் வெளியாகி 100 கோடி வசூலை அள்ளியது. விரைவில் சர்தார் 2ம் உருவாகும் என்றும் கார்த்தி சமீபத்திய பேட்டியில் தெரிவித்ததால், அடுத்த வருடம் அதற்கான ஏற்பாடுகளை துவங்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு தீரன் 2, கைதி 2, சர்தார் 2 போன்ற பார்ட் 2 படங்களை தற்சமயம் கார்த்தி கையில் வைத்திருக்கிறார்.

Also Read: 2023 அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட 5 படங்கள்.. எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி சொதப்பிய தாஸ் அண்ட் கோ

Trending News