வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

காதலியை கரம்பிடித்த வலிமை பட வில்லன்.. காட்டுத் தீயாய் பரவும் திருமண புகைப்படங்கள்

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் கார்த்திகேயா கும்மகொண்டா. இவர் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து ஹாப்பி குணா படத்தில் நடித்தார்.

தமிழ்சினிமாவில் பிக்பாஸ் ஓவியா கதாநாயகியாக நடித்த 90 எம்எல் படத்தில் சில காட்சிகளில் மட்டும் கார்த்திகேயா நடித்திருந்தார். சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

valimai-karthikeya
valimai-karthikeya

இந்நிலையில் கார்த்திகேயா தனது நீண்ட நாள் தோழியான லோகிதா ரெட்டியை இன்று திருமணம் செய்துகொண்டார். கார்த்திகேயா, லோகிதா இருவரும் 2010 இல் இன்ஜினியரிங் படிக்கும் பொழுது காதலித்து வந்தார்கள். அந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

valimai-karthikeya

கார்த்திகேயா, லோகிதா திருமண நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கு திரையுலக பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினார்கள். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

kartikeya gummakonda
kartikeya gummakonda

Trending News