ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சிங்கப்பெண்ணில் கொளுத்தி போட்ட கருணாகரன், பற்றி எரியும் மகேஷ்.. அன்பு, ஆனந்திக்கு வர போகும் பெரிய சிக்கல்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் பரபரப்பாக ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே ஆனந்தியுடன் அன்பு நெருக்கம் காட்டி வருவதாக மித்ரா மகேஷிடம் பிள்ளையார் சுழி போட்டு இருந்தாள்.

தற்போது அதை சுற்றி சதி வலையை பின்னி அன்பு மற்றும் ஆனந்தியை அதில் சிக்க வைக்க இருக்கிறார்கள். ஆனந்தியுடன் இரவு ஒன்றாக பைக்கில் போனது, ரோட்டு கடையில் சாப்பிட்டது என எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து மகேஷ் சந்தோஷத்தில் பூரித்து போயிருந்தான்.

ஆனந்தியிடம் தன்னுடைய காதலை சொன்னால் அவள் கண்டிப்பாக அதற்கு ஓகே சொல்லிவிடுவாள் என்பது மகேசின் பெரிய நம்பிக்கை. அது மட்டும் இல்லாமல் என்ன மாதிரி ஒரு பையன் காதலை சொன்னால் யார் தான் வேண்டாம் என சொல்வார்கள் என அதீத நம்பிக்கை வேற மகேஷுக்கு இருக்கிறது.

இது பற்றி மித்ராவிடம் மகேஷ், பேசிக்கொண்டிருக்கும்போது மித்ரா அவளுடைய சதி வேலையை ஆரம்பித்து விட்டாள். மகேஷிடம் ஆனந்தி, அன்பு அப்பா திதிக்கு போய்விட்டு வந்ததை மறுபடியும் மகேஷுக்கு ஞாபகப்படுத்துகிறாள்.

அது மட்டும் இல்லாமல் நீயும் அன்புடன் நட்பாக தானே பழகுகிறாய் உன்னையே நான் கூப்பிடவில்லை என்ற கேள்வியையும் கேட்கிறாள். அதே நேரத்தில் கருணாகரன் அன்பு கொடுக்கும் தைரியத்தில் மொத்த டீமும் சரியாக வேலை செய்வதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறான்.

அன்பு, ஆனந்திக்கு வர போகும் பெரிய சிக்கல்

மதிய வேளையில் ஆனந்தியை சந்திக்க மகேஷ் வருகிறான். அப்போது அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் சாப்பிடுவதற்காக மாடிக்கு சென்று விடுகிறார்கள். இது பற்றி கருணாகரனிடம் கேட்கும்போது, ரெண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று வேண்டுமென்று லேட்டாக போகிறார்கள்.

இரண்டு பேரும் கொஞ்ச நாளாகவே இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மகேஷிடம் சொல்லுகிறான். ஏற்கனவே அன்பு மற்றும் ஆனந்தியின் நெருக்கத்தால் மகேஷ் பற்றி எரிந்து கொண்டிருக்கிறான், அதில் கண்ணால் முடிந்ததை கொளுத்தி போட்டு இருக்கிறார் கருணாகரன்.

இனி அன்பும் ஆனந்தியும் ஒன்றாக ஒரே இடத்தில் வேலை செய்யாத மாதிரி மகேஷ் ஏதாவது திட்டம் போடப் போகிறான். ஒரு வேலை அன்புவை கம்பெனியை விட்டு வெளியே அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News