புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் அன்புக்கு கெடு வைத்த கருணாகரன்.. தேரை இழுத்து தெருவில் விட்ட ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் மித்ரா கொடுத்த பிளான் கச்சிதமாக தொடங்கி விட்டான் கருணாகரன். அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை மகேஷ் நம்பும் படி அடுத்தடுத்து அவனை உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருக்கிறாள் மித்ரா.

ஏற்கனவே அன்பு வீட்டுக்கு ஆனந்தி போய் வந்தது, வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டது எல்லாமே மகேஷுக்கு வயிற்று எரிச்சலை கிளப்பி இருக்கிறது. அதில் மேலும் எண்ணெய் ஊத்தி கொழுந்து விட்டு எறியும் படி அடுத்த சம்பவம் நடைபெற இருக்கிறது.

ஆனந்தியின் ஹாஸ்டல் தோழிக்கு அவள் வேலை செய்யும் இடத்தில் ரெஸ்டாரண்டில் குடும்பத்துடன் போய் சாப்பிடும் பாஸ் கொடுக்கிறார்கள். உடனே அவளுடைய தோழி ஆனந்திக்கு கம்பெனிக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி சாயங்காலம் போகலாம் என திட்டமிடுகிறார்கள்.

தேரை இழுத்து தெருவில் விட்ட ஆனந்தி

உடனே ஆனந்தி அன்புவையும் அழைத்துக் கொண்டு போகலாம் என சொல்கிறாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த கருணாகரன் இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்கள் போல என நினைக்கிறேன். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சாயங்காலம் அன்பு அந்த ரெஸ்டாரண்டுக்கு போகாமல் இருக்க என்ன செய்வது என கருணாகரன் திட்டமிடுகிறான்.

ஸ்டாக் எவ்வளவு இருக்கிறது என்ற ரிப்போர்ட் எனக்கு நாளை காலை வந்தாக வேண்டும் என கெடு கொடுக்கிறான். இதனால் அன்புக்கு நிறைய வேலை வந்து விடுகிறது. ஆனந்தி நீங்கள் வேலை முடித்து விட்டு வரும் வரை நானும் உங்களுடன் தான் இருப்பேன் என அடம் பிடித்து அன்புடன் சேர்ந்து அந்த வேலையை செய்கிறாள். இதை மட்டும் மகேஷ் பார்த்தால் கண்டிப்பாக அன்பையும் மொத்தமாக வெறுத்து ஒதுக்கி விடுவான். அது மட்டும் இல்லாமல் அன்புவின் வேலைக்கு எது கெடுதல் ஆகிவிடும்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News