ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தங்க மீன்கள் படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. இவர் நடித்திருந்தாலும் நல்லா இருந்திருக்கும்

ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்கமீன்கள். இப்படத்தில் இவரை இயக்கியும் நடித்தும் இருந்தார். தந்தை மகள் பாசத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ராம் இயக்கும் அனைத்து படங்களுமே வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பனி மூட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தில் ராமிற்கு மகளாக சாதனா நடித்திருந்தார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையும் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இப்படத்தில் முதன் முதலில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருந்துள்ளார். கால்ஷீட் காரணமாகவே பின்பு ராம் இயக்கி நடித்ததாக கூறியுள்ளார்.

karunas-cinemapettai
karunas-cinemapettai

பிரபல நடிகர் கருணாஸ் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. கருணாஸ் வைத்து ஒரு சில இயக்குனர்களும் ஹீரோவாக படங்கள் இயக்கி வெற்றியும் கண்டனர். தங்கமீன்கள் படத்தில் ராமிற்கு பதிலாக கருணாஸ் நடிக்க இருந்துள்ளார்.

ஆனால் அப்போது ஏகப்பட்ட படங்கள் நடித்து வந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை பின்பு ராம் இயக்கி நடித்திருந்தார். தற்போது இதனை கேட்ட ரசிகர்கள் கருணாஸ் நடித்திருந்தாலும் படம் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

Trending News