வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உதயநிதியை சந்திக்காமல் மௌனம் காக்கும் கருணாஸ்.. மொத்த கண்ட்ரோலையும் எடுத்துக்கிட்ட லொடுக்கு பாண்டி

Karunas: இப்பொழுது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக போய்க் கொண்டிருப்பது திரிஷாவின் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் தான். சும்மாவே ஒரு விஷயம் கிடைச்சுதுன்னா அதை ஊதி பெரிசாக்குவதை பலரும் வேலையாக வைத்து வருகிறார்கள். இப்படி இருக்கும் சமயத்தில் த்ரிஷாவை பற்றி அவதூறாக பேசி நேற்று ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

அதில் த்ரிஷாவை அசிங்கப்படுத்தும் விதமாக சேலம் ADMK ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி அனைத்து பக்கங்களிலும் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் திரிஷாவுக்கு சப்போர்ட்டாக சேரன் போன்ற பல நடிகர்கள் போர் கொடி தூக்கி வருகிறார்கள்.

அத்துடன் தானும் சும்மா இருக்க கூடாது என்பதற்காக த்ரிஷாவும் அந்த வீடியோவுக்கு சட்டரீதியாக பதில் கொடுக்கிறேன் என்று ஒரு பதிவை போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரச்சினை பூதாகரமாக வெடித்ததால், அந்த அரசியல்வாதியும் திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பை கேட்டு விட்டார். இருந்தாலும் இதற்கு கருணாஸ் பெயரும் அடிபட்டது.

Also read: திரிஷாவிற்காக குரல் கொடுக்காத 4 பேர்.. அரசியல் கட்சி தொடங்கியும் பதுங்கி இருக்கும் விஜய்

அதாவது கருணாஸ் தான் அந்த கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ அனைவருக்கும் இந்த மாதிரி ஒரு ஏற்பாட்டை பண்ணி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அனைவரது கண்ட்ரோலும் கருணாஸ் இடம் தான் இருந்தது என்றும் இவருடைய பெயர் அடிபட்டது. இதை கேட்டும் கருணாஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை.

அட்லீஸ்ட் சக நடிகையாக இருக்கும் த்ரிஷா மீது இப்படி ஒரு களங்கம் ஏற்பட்டு இருக்கிறது என்ற ஒரு எண்ணத்தில் கூட கருணாஸ் குரல் கொடுக்காமல் மௌனமாக இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் தெரியவில்லை. கருணாஸ் நேரடியாக ஏதும் பேசவில்லை என்றாலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையில் எம்பி யாக இருக்கும் உதயநிதியை சந்தித்து கூட பேசி இருக்கலாமே.

இதில் த்ரிஷா பெயர் மட்டும் அடிபட்டது இல்லாமல் கருணாஸ் பெயரும் தான அடிபட்டு இருக்கிறது. அந்த களங்கத்தை துடைப்பதற்காகவாவது இவர் உதயநிதியை சந்தித்து பேசி இருக்கலாம். ஆனால் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் எனக்கு என்ன என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது ஏதோ பல விஷயங்களை கமுக்கமாக இருந்து மறைப்பது போல் தெரிகிறது. இது எல்லாத்துக்கும் பதில் வேண்டும் என்றால் கருணாஸ் வாயை திறந்தால் மட்டும் தான் கிடைக்கும்.

Also read: அவமானப்படுத்தியும் இடி தாங்கியாக குரல் கொடுத்த மன்சூர்.. ஒரே பேட்டியில் விஜய்க்கு வைத்த கொட்டு

Trending News