வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காசேதான் கடவுளடா படத்திற்கு காசால் வந்த சோதனை.. கோர்ட் ஆர்டரை மீறினாரா யோகி பாபு.?

இயக்குனர் ஆர் கர்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்திருக்கும் காசேதான் கடவுளடா படத்தில், சிவா உடன் யோகி பாபு, சிவாங்கி, ஊர்வசி, மனோபாலா, குக் வித் கோமாளி புகழ் என பல பிரபலங்கள் நடித்து வெளிவர காத்திருக்கிறது. இதில்  கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

இதில் யோகி பாபு நகைச்சுவை நடிகராக சிவா உடன் சேர்ந்து ஓவர் அலப்பறை காட்டியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் வரவேண்டிய காசேதான் கடவுளடா படத்தை மார்ச் 3ம் தேதி வரும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.

Also Read: சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு

1972 ஆம் ஆண்டு முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட நடிப்பில் வெளியான காசேதான் கடவுளடா என்ற அதிரடி நகைச்சுவை படத்தின் ரீமேக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ரிலீசில் பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருந்த காசேதான் கடவுளடா படம் மீண்டும் ஒரு சோதனையில் மாட்டிக்கொண்டது.

இதனால் படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என, கோர்ட்டின் உத்தரவை யோகி பாபு மீறி விடுவார் போல் தெரிகிறது. இந்த படத்தில் உரிமையை டி நகரை சேர்ந்த ராஜ்மோகன், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவரிடம் 1 கோடியே 75 லட்சம் கொடுத்து பணத்தை எடுக்க அனுமதி வாங்கி இருந்தனர்.

Also Read: கதையே கேட்காமல் கழுத்தில் துண்டை போடும் யோகி பாபு.. கேரியருக்கு வரும் பேராபத்து

ஆனால் இன்றுவரை பணத்தை கொடுக்கவில்லை. ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியிட்டால் எனக்கு நஷ்டம் ஏற்படும் என்று ராம் பிரசாத் வழக்கு தொடர்ந்து உள்ளார்.  இதற்கு ராஜ்மோகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஏற்கனவே குறிப்பிட்ட பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதி பணத்தை கொடுக்கும் வரை நாங்கள் படத்தை வெளியிட மாட்டோம்’ என வாக்குறுதி அளித்துள்ளனர்.

இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி ராஜ்மோகன் தரப்பிற்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 2ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் படத்தை வரும் மார்ச் 3-ம் தேதி படக்குழு வெளிவருமா என்று தெரியவில்லை. இப்படியே போனால் அந்த படத்தை மறந்துவிடுவார்கள்.

Also Read: நக்கல் நடிகருடன் பட வாய்ப்பை தட்டி பறித்த யோகி பாபு.. சூரி மார்க்கெட்டை இழக்க இது தான் காரணம்

Trending News