வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

23 வருட சாபத்தை தும்சம் செய்யும் பொன்னியின் செல்வன்.. சாதனை படைக்கும் மணிரத்தினம்

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் தற்போது சூடு பிடித்த தொடங்கியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என இப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக தனுஷின் நானே வருவேன் மற்றும் ஹிந்தியில் விக்ரம் வேதா படம் வெளியாக உள்ளது. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் தான் அதிகமாக உள்ளது.

Also Read: பொன்னியின் செல்வன் 2 எப்போது வெளிவரும்.? வெளிப்படையாகச் சொன்ன மணிரத்னம்

ஏனென்றால் பொன்னியின் செல்வன் படத்தில் நிறைய மர்மங்கள் இருக்கிறதாம். அதுமட்டுமின்றி படம் வெளியானதுக்கு பிறகும் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்திருப்பதாக மணிரத்தினம் கூறியுள்ளார். அதாவது முதல் பாகத்தில் உள்ள சஸ்பென்ஸ் இரண்டாம் பாகத்தில் தான் உடையும்.

மேலும் இவ்வளவு சாதனையை உள்ளடக்கிய பொன்னியின் செல்வன் படம் தற்போது மீண்டும் ஒரு சாதனை படைக்க உள்ளது. அதாவது காஷ்மீரில் 1999இல் மூன்று தியேட்டர் திறக்கப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்த ரசிகர்களை பயங்கரவாதிகள் குண்டு வைத்து சுட்டுக்கொன்றனர்.

Also Read: பொன்னியின் செல்வன் விழாவில் சேட்டை செய்த சித்தார்த்.. அரங்கத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரிஷா

இதனால் அதன் பின்பு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்த மல்டிபிளக்ஸ் என்ற திரையரங்கை துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா அண்மையில் திறந்து வைத்தார். இதில் முதலாவதாக பொன்னியின் செல்வன் படத்தை திரையிட உள்ளனர்.

இதுவே மணிரத்தினத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். மேலும் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம். படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால் நாளுக்கு நாள் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Also Read: மணிரத்தினத்தை தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சூப்பர் ஸ்டார் கற்பனையில் பொன்னியின் செல்வன்

Trending News