வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நயன்தாராக்கு ஓவராக கருத்து சொன்ன கஸ்தூரி.. வெளுத்து விட்ட வத்திக்குச்சி வனிதா!

நயன்தாரா தன்னுடைய குழந்தைகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே அவர் பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் நிரம்பி வழிகிறது. நான்கே மாதத்தில் குழந்தைக்கு தாயான நயன்தாராவை பற்றி ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறிக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொருவர் மனதில் உள்ள விஷயங்களும் தற்போது தான் வெளிவர ஆரம்பித்து இருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும் சிலர் சட்ட புத்தகத்தை கரைத்துக் குடித்துவிட்டு பேசுவது போன்று கூறும் கருத்து தான் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. அப்படி ஒரு விஷயத்தை தான் நடிகை கஸ்தூரி செய்திருந்தார்.

Also read : நயன்தாராவை கைது செய்ய வாய்ப்பு இருக்கா? மறைமுகமாக போட்டுக்கொடுத்த கஸ்தூரி

இந்த விஷயம் குறித்து அவர் எனக்கு சட்டம் தெரியும் மருத்துவர் ரீதியாக இது தப்பு என்றெல்லாம் அதிமேதாவி போல் பேசி இருந்தார். இதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதிலும் முக்கியமாக வனிதா விஜயகுமார் கஸ்தூரியை நன்றாக வெளுத்து வாங்கி விட்டார்.

அதாவது அவர் குழந்தை பிறப்பு என்பது புனிதமான விஷயம். ஆனால் அதை கொண்டாடாமல் அதில் இருக்கும் குறைகளை மட்டுமே ஆராய்ந்து சிலர் வம்பு பேசி வருகின்றனர் என்று மிகவும் காட்டமாக தெரிவித்து இருந்தார்.

Also read : நாயோட எதுக்கு வம்பு பிரபலத்தை கிழித்தெறிந்த கஸ்தூரி.. நெருப்பில்லாமல் புகையாது மேடம்

அது மட்டுமல்லாமல் சில கோமாளிகள் இப்படித்தான் பேசுவார்கள் எனக்கு சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும் என்றெல்லாம் உளறி கொட்டுவார்கள் என நேரடியாகவே கஸ்தூரியை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இரு குழந்தைகளுக்கு அம்மா அப்பாவாக மாறிவிட்டோம் என்று சந்தோஷத்துடன் அவர்கள் போட்ட பதிவு இப்படி ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த தருணத்தை கொண்டாடக்கூட விடாமல் சிலர் இது போன்று வார்த்தையை விடுவது ஏன் என்று ரசிகர்கள் நயன்தாராவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

Also read : வனிதாவால் சினிமா மீது வந்த அருவருப்பு.. 2 வருடமாக பட வாய்ப்பை நிராகரிக்கும் நடிகை

Trending News