செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

மலையாள சூப்பர் ஹிட் படத்தில் களமிறங்கும் பிகில் பட கதிர்.. ரீமேக் வெற்றி கிடைக்குமா.?

கோலிவுட்டில் பல நடிகர்கள் சிறப்பாக நடித்தாலும் ஏனோ தெரியவில்லை அவர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் விதார்த் கதிர் என பல நடிகர்கள் உள்ளனர். கதிர் பல படங்களில் நடித்திருந்தாலும் பரியேறும் பெருமாள் படம் தான் அவரை ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

அதனை தொடர்ந்து விஜய்யுடன் பிகில் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். ஆனால் அதன் பின்னர் அவரது படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. உண்மையை கூற வேண்டுமானால் கதிர் ஒரு சிறந்த நடிகர். இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இஷ்க் என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரதீஷ் ரவியின் எழுத்தில் அனுராஜ் மனோகர் இயக்கியிருந்த இஷ்க் படத்தில் நாயகனாக ஷேன் நிகாமும், நாயகியாக ஆன் ஷீத்தலும் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் கதிருக்கு கிடைத்துள்ளது. அவர் மட்டும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் டாப் நடிகராக வளர வாய்ப்புள்ளது.

இஷ்க் படத்தில் இரவு காரில் தனியாக இருக்கும் நாயகன் நாயகியை மப்டியில் இருக்கும் இரு போலீஸ்காரர்கள் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்கின்றனர். மனரீதியாக இருவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

பின்னர் ஒரு கட்டத்தில் அவர்கள் போலீஸ் அல்ல என்ற உண்மை நாயகனுக்கு தெரியவர அவனும் அவர்களை போலவே அடி உதை இல்லாமல் மன ரீதியாக டார்ச்சர் செய்கிறான். இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

மலையாளத்தில் வெற்றி பெற்ற தொடர்ந்து இந்த படத்தை ஹிந்தியில் நீரஜ் பாண்டே நடிகர் அமீர் கானின் மகனை வைத்து இயக்கி வருகிறார். தற்போது தமிழில் கதிர் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளனர். கதிருக்கு ஜோடியாக பேச்சிலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி நடிக்கிறார். விரைவில் படத்தின் பெயர் மற்றும் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement Amazon Prime Banner

Trending News