குணசேகரன் செய்த அநியாயங்களால் இப்பொழுது மாமியார் வீட்டில் கேப்ப கலி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அண்ணன் முக்கியமில்லை மனைவி மகள் என திருந்தி வாழ்ந்த கதிர் மற்றும் ஞானம் இருவரும் பழையபடி மாறுகிறார்கள். வீட்டுப் பெண்களை மீண்டும் அடிமைப்படுத்துகிறார்கள்.
முன்பு அண்ணன் குணசேகரனின் வலதுகரமாக, வேட்டைக்காரன் போல் இருந்தவர் கதிர். குணசேகரன், நான் வளர்க்கும் வேட்டை நாய் கதிர் என பல இடங்களில் அவரை கொச்சைப்படுத்தி பேசுவார். கதிரும் அண்ணன் சொல்லே மந்திரம் என ஆரம்பத்தில் பல அநியாயங்களை செய்தார்.
குணசேகரன் பற்றி முற்றிலும் தெரிய வந்த பிறகு கதிர் திருந்தி நல்லவனாக மாறினார். ஆனால் இப்பொழுது அண்ணன் ஜெயிலுக்கு போனதால் கதிர் மற்றும் ஞானம் இருவருக்கும் மனசு கேட்காமல், அண்ணன் குணசேகரனை வெளியில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.
அண்ணின்னு கூட பாக்காம அருவருப்பா பேசும் கதிர்
வீட்டில் அப்பத்தா மரணத்தில் அண்ணனுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லக்கூடாது என கதிர் மற்றும் ஞானம் இருவரும் மிரட்டுகிறார்கள். அண்ணன் மாட்டிக்கொண்டால் தானும் மாட்டிக் கொல்வேன் என்று கதிர் மனதில் ஒரு பயம் இருந்து வருகிறது.
கதிர், கோபமாக அண்ணி ஈஸ்வரியிடம் தகாத வார்த்தைகளில் பேசி அவரை அசிங்கப்படுத்துகிறார். அண்ணனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டால் நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போடலாம் என மிகவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார் கதிர்.
- மாமியார் வீட்டு விருந்துக்கு ரெடியான குணசேகரன்
- வார்த்தையிலேயே அருவருப்பான வக்கிரத்தை கக்கும் குணசேகரன்
- குணசேகரன் மூஞ்சியில் கரிய பூசிய மருமகள்கள்