வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ராஜியை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வரும் கதிர்.. பாண்டியனிடம் மல்லுக்கட்ட போகும் மச்சான்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜிக்கு திருமண ஏற்பாடு பண்ணியதால் சொந்தக்காரர்கள் வந்து விட்டார்கள். பிறகு வழக்கம் போல் ராஜ்ஜியை காணும் என்று வீட்டில் அனைவரும் தேட ஆரம்பித்து விட்டார்கள். அதன்பின் விஷயம் தெரிந்த ஊர் மக்கள் ராஜி குடும்பத்தை தரக்குறைவாக பேச ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கு இடையில் திருச்செந்தூர் கோவிலில் வைத்து கதிர்க்கும் ராஜிக்கும் திருமணம் முடிந்து விடுகிறது. பிறகு இவர்களை கோமதி ஊருக்கு அழைத்து வருகிறார். வந்ததும் யாருமே எதிர்பார்க்காத அளவில் ஒரு விஷயம் நடந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள். பிறகு பாண்டியனும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார்.

இதற்கு தான் நீங்கள் அனைவரும் திருச்செந்தூருக்கு போனீர்களா, என் மகளின் மனசை மாத்தி திருட்டு கல்யாணத்த பண்ணி என் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் என்று மச்சான் பாண்டியனிடம் மல்லிகட்டு ஆரம்பிக்கிறார். ஆனால் இது எதுவுமே தெரியாத பாண்டியன் கோமதி இடம் சண்டை போடுகிறார்.

Also read: மீனா கொடுத்த ஐடியாவால் ஒன்று சேரப்போக்கும் ராஜி கதிர்.. பாக்யா தலைமையில் நடக்கப்போகும் திருமணம்

பிறகு வழக்கம் போல் பாண்டியன், கதிரை கன்னாபின்னா என்று வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பிக்கிறார். ஒரு வழியாக இந்த பஞ்சாயத்து முடிந்த நிலையில் ராஜி பாண்டியன் குடும்பத்தில் வாழ்வதற்காக போகிறார். ஏற்கனவே கதிரும் ராஜியும் எலியும் பூனையும் ஆக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். தற்போது கதிர் ராஜு ஒன்று சேர்ந்ததால் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது.

இதற்கிடையில் பாண்டியன் மொத்த கோபத்தையும் கோமதி இடம் காட்டி வருகிறார். ஆனால் வழக்கம்போல் இந்த பிரச்சினை எல்லாம் மீனா கூடிய விரைவில் சரி செய்து விடுவார். ஆனால் பாண்டியனின் மச்சான்கள் மட்டும் ரொம்பவே கொந்தளித்து போய் இருக்கிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே இப்படி தான் தங்கையை திருட்டுத்தனமாக கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணினார். இப்பொழுது மகளுக்கும் அதே நிலைமை என்றதும் நிலை குலைந்து போய் நிற்கிறார்.

Also read: டாம் அண்ட் ஜெரியாக இருந்த ராஜிவை திருமணம் செய்த கதிர்.. பாக்யா தலைமை நடந்த ரகசிய கல்யாணம்

Trending News