பாண்டியனின் நிலைமையை பார்த்து அழுது துடித்த கதிர்.. சக்திவேலு பிளானை சுக்கு நூறாக உடைத்த குமரவேலு

pandian strores 2
pandian strores 2

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஆண் பிள்ளைகளை விட அரசிக்கு அதிகமாக செல்லம் கொடுத்து கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து பாசத்தைக் கொட்டிய பாண்டியனுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றமாக அரசி, குமரவேலுவை காதலித்தது இடியாக விழுந்துவிட்டது. இதனால் மனம் உடைந்து போன பாண்டியன் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டார்.

ஆனால் சும்மா கடந்த சங்கை ஊதி கெடுத்து பெருசாக வேண்டும் என்ற நோக்கத்தில் சக்திவேல் வாசலில் நின்று அரசியை தவறாக பேசி பாண்டியன் குடும்பத்தையும் அவமானப்படுத்தி விட்டார். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத பாண்டியன் எதுவும் பேசாமல் தனியாக என்னை கொஞ்சம் நேரம் விடுங்கள் என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

அப்படி போகும் பொழுது அரசியை இப்படியெல்லாம் பொக்கிஷமாக பாதுகாத்து வளர்த்தும், இப்படி நம்ப வச்சு ஏமாற்றி விட்டாலே என்ற நினைப்பில் ரொம்பவே பீல் பண்ணி போய்விட்டார். ஆனாலும் இவ்வளவு நேரம் ஆகியும் பாண்டியன் வீட்டுக்கு வரவில்லை என்று யோசித்த மீனா, செந்தில் கதிர் மற்றும் பழனிவேலுவை அனுப்பி மாமாவை கூட்டிட்டு வாங்க என்று சொல்லிவிடுகிறார்.

அதன்படி ஒவ்வொருவரும் நாலா பக்கமும் தேடி அழைக்கிறார்கள். அப்படி போகும்பொழுது பாண்டியன் பேருந்து நிலையத்தில் இல்லாத பட்ட மக்கள் தூங்கிக் கொண்டிருந்த இடத்தில் யாருமே இல்லாத ஒரு பாவப்பட்ட ஜென்மமாக பாண்டியன் தூங்கிக் கொண்டிருப்பதை கதிர் பார்த்து விடுகிறார். அந்த நிமிஷமே பாண்டியனின் நிலைமை பார்த்த கதிர் துடித்து போய் அழ ஆரம்பித்து விட்டார்.

பிறகு பாண்டியனை எழுப்பி சென்டிமெண்டாக பேசி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அங்கே செந்தில் பழனிவேலுவையும் வரவழைத்து பாண்டியனை வீட்டுக்கு கூட்டிட்டு வருகிறார்கள். இவர்களுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சரவணன் வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறார். ராஜி அம்மா என்ன ஆச்சு என்று தெரியாமல் கோமதி வீட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் அரசின் காதல் இப்பொழுது வீட்டுக்கு தெரிந்ததால் எந்த அளவுக்கு எல்லோரும் மனம் உடைந்து போய் இருக்கிறார்கள் என்று அரசிக்கு புரிந்திருக்கும். அதனால இனி குமரவேலு இருக்கும் பக்கத்தில் கூட தலை வைத்து படுக்க மாட்டார். அதே மாதிரி சுகன்யா தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ற விஷயமும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்தால் பாண்டியன் குடும்பம் தப்பித்து விடும்.

அத்துடன் அரசியை வைத்து பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று பிளான் பண்ணிய சக்திவேலுவின் திட்டத்திற்கு குமரவேலு ஆப்பு வைக்கும் விதமாக அரசியை சினிமாவிற்கு கூட்டிட்டு போயி எல்லா பிளானையும் சுக்கு நூறாக உடைத்து விட்டார். குமரவேலுவிடமிருந்து அரசி எஸ்கேப் ஆகிவிட்டார்.

Advertisement Amazon Prime Banner