ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மாமனார் குடும்பத்துடன் ராஜியை சேர்த்து வைக்க முடிவு பண்ணிய கதிர்.. பாண்டியனை பிளாக்மெயில் பண்ணும் மருமகள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் தூங்க வரும் பொழுது ராஜி குடும்ப புகைப்படம் கதிர் பார்க்கும் படியாக கையில் விழுகிறது. இதை பார்த்ததும் ராஜி நாங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பொங்கலுக்கு எடுத்த போட்டோ இது. எப்பொழுதெல்லாம் அவர்கள் ஞாபகம் வருகிறதோ, அப்போது இந்த புகைப்படத்தை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறேன்.

இதுதான் எனக்கு இப்ப இருக்கிற சந்தோசம் என்று குடும்பத்தை பற்றி கதிரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். கதிரும் ஒவ்வொன்றாக அதைப் பற்றி கேட்கிறார். ஏனென்றால் எப்படியாவது ராஜியை அந்த குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஏனென்றால் பல வருடங்களாக அம்மாவுடன் பேசாமல் கோமதி படும் கஷ்டத்தை கதிர் பார்த்து வருவதால் ராஜிக்கும் அந்த கஷ்டம் வந்து விடக்கூடாது என்று கதிர் நினைக்கிறார்.

ராஜி கவலையை சரி செய்ய நினைக்கும் கதிர்

அப்படி ராஜி குடும்பத்துடன் சேர்ந்து விட்டால் அம்மாவும் பாட்டியுடன் பேசி சந்தோஷப்பட்டு கொள்வார் என்று கதிர் மாமனார் குடும்பத்துடன் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி இருக்கிறார். அடுத்ததாக மீனா, செந்திலிடம் என்னுடைய அப்பா மனசை மாற்றுவதற்காக கவர்மெண்ட் வேலைக்கு போக போறேன்னு சொல்லி இருக்கிறாய். அதற்கு என்ன ஸ்டெப் எடுத்த என்று கேட்கிறார்.

உடனே செந்தில் அது பற்றி விஷயங்களை நானும் தெரிந்தவர்களிடம் விசாரித்தேன். ஒரு பக்கம் அதையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மீனா சில ஐடியாக்களையும் படிப்பதற்கு சில புத்தகங்களையும் கொடுக்கிறார். நீ இதை படித்துக் கொண்டு இரு நான் உனக்கு காபி போட்டு கொண்டு வரேன் என்று மீனா கிளம்பிய நிலையில் செந்தில் தூங்கி விடுகிறார்.

அடுத்ததாக தங்கமயில் ஹனிமூன் போவதற்கு டிரஸ் எடுத்து பேக் பண்ணி கொண்டு இருக்கிறார். அப்பொழுது சரவணன் வந்த பொழுது, தங்கமயில் இடம் ரூமுக்கு 5000 தான் என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில் ஆமாம் என்று சொல்லிய நிலையில் சரவணன் சரி என்று சொல்லி தூங்க போகிறார். அப்பொழுது தங்கமயில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு மெசேஜ் வருகிறது.

அதில் ரூமுக்கு அட்வான்ஸ் 5000 மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாய் பணம் அங்கே போன பிறகு செலுத்த வேண்டும் என்று போட்டிருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில் ரூமை விட்டு வெளியே வந்து அம்மாவுக்கு போன் பண்ணி விவரத்தை சொல்கிறார். உடனே அம்மா இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, நாம் எவ்வளவு கடன் வாங்கி உன் கல்யாணத்தை பண்ணி வைத்திருக்கிறோம்.

அதையெல்லாம் உன் மாமனாரிடம் சொல்லி அவர் வாயை அடைத்து விடலாம். அப்படி ஏதாவது பணம் அதிகமாயிற்று என்று சொன்னால் நான் வருகிறேன். என் பொண்ணுக்கு அவ்வளவு நகை போட்டு பணத்தை செலவு செய்து கல்யாணத்தை பண்ணி வைத்திருக்கிறேன். ஹனிமூன் கூட செலவு பண்ண மாட்டீங்களா என்று கேட்கிறேன். நீ அதனால் எதை நினைத்தும் யோசிக்காமல் ஒழுங்காக கிளம்பி போ என்று சொல்கிறார்.

அந்த வகையில் பாண்டியன் ஏதாவது பேசினால் அவரை பிளாக்மெயில் பண்ணி லட்சக்கணக்கில் செலவு செய்து கல்யாணம் பண்ணி 80 பவுன் நகை போட்டு வந்திருப்பதை சொல்லி வாயை அடைத்து விடலாம் என்று தங்கமயில் பிளான் பண்ணி விட்டார். ஆனால் அது அனைத்தும் ஒரிஜினல் நகையிலை டூப்ளிகேட் என்று தெரிய வரும் பொழுது தான் மொத்த குடும்பத்திற்கும் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News