திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சைடு கேப்பில் ராஜியிடம் அசடு வழியும் கதிர்.. மருமகளை பற்றி பெருமையாக நினைக்கும் பாண்டியன், சதி செய்யும் சக்திவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தன்னுடைய மச்சானுக்கு பொண்ணு பார்த்துட்டோம். இனி கல்யாண வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து சீரும் சிறப்புமாக கல்யாணத்தை பண்ண வேண்டும் என்ற சந்தோஷத்தில் வந்து கொண்டிருக்கிறார். பாண்டியனை நடுரோட்டில் பார்த்த சக்திவேல் மற்றும் முத்துவேல் வழிமறித்து பேசுகிறார்கள்.

என் தம்பிக்கு பொண்ணு பார்க்க நீ யாரு, உன் தகுதிக்கேத்த மாதிரி தான் பார்த்திருப்பாய். எங்க தகுதி தராதரம் என்னவென்று தெரியாமல் உன் இஷ்டத்துக்கு ஆடுகிறாய். எங்களுக்கு எப்படி பொண்ணு பார்க்கணும் எப்பொழுது பார்க்கணும் என்று தெரியும். உன் வேலை மட்டும் பார்த்துக் கொள் என்று இரண்டு பேரும் பாண்டியனிடம் சொல்கிறார்கள்.

அதற்கு பாண்டியன் இவ்வளவு நாள் நீங்க என்னத்த பார்த்து வச்சீங்க, பழனிவேலு என் மச்சான் மட்டும் இல்ல சின்ன வயசுல இருந்து என் கூட இருக்கும் மகன்தான். அவனுக்கு என்ன பண்ணனும் எப்பொழுது செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அண்ணன் என்கிற முறையில் நீங்கள் கல்யாணத்துக்கு வந்தா போதும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே சக்திவேல் இந்த கல்யாணத்தை எப்படி நடத்துகிறாய் என்று பார்க்கிறேன் என சவால் விடும் அளவிற்கு பேசுகிறார்.

அந்த நேரத்தில் செந்தில் மற்றும் சரவணன் வந்ததும் எதுவும் பேசாமல் சக்திவேல் மற்றும் முத்துவேல் போய்விடுகிறார்கள். பிறகு பாண்டியன் வீட்டிற்கு வந்த நிலையில் கோமதி மற்றும் பழனிவேலுவிடம் உங்க அண்ணன்கள் நடுரோட்டில் பார்த்து பேசினார்கள். இந்த கல்யாணத்தை தடுப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் எப்படியும் நான் சொன்னபடி பழனிவேலுக்கு கல்யாணத்தை பண்ணி வைத்து விடுவேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது மீனா, பாண்டியனிடம் ஆக்கிரமிப்பு நிலம் விஷயம் எல்லாம் நான்தான் ஆபீஸில் டீல் பண்ணுகிறேன். அப்படி ஒரு கடை நம் அத்தையுடன் அண்ணன்கள் இடத்தில் இடத்தில் இருக்கிறது. ஆனால் அது அவங்களுடைய கடை என்று தெரியாமல் நான் நோட்டீஸ் அனுப்பினேன். பிறகு நோட்டீசை பார்த்ததும் ஆபீஸ்க்கு வந்து பேசினார்கள் என்ற விவரத்தை மீனா சொல்கிறார்.

உடனே செந்தில், ஆபீஸ் வந்து பேசினாங்களா இல்ல உன்னிடம் ஏதாவது பிரச்சினை பண்ணினார்களா என்று கேட்டார். அதற்கு மீனா அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஆனால் அந்த கோபத்தை வீட்டில் கூட வந்து காட்டலாம். அதனால் ஏதாவது பிரச்சனை பண்ணுவார்கள் என்பதால் தான் முன்னாடியே உங்களிடம் சொல்கிறேன் என்று மீனா சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் எது நியாயமோ அதற்கு ஏற்ற மாதிரி தான் என்னால் வேலை பார்க்க முடியும்.

சொந்தக்காரங்க என்று என்னால் எதுவும் பண்ண முடியாது என்று சொல்லிய நிலையில் பாண்டியன், நீ இந்த மாதிரி யோசித்ததை எனக்கு பெருமையாக இருக்கிறது. இப்படி நீ உண்மையாக உன் வேலைக்கு இருப்பது தான் எனக்கு கௌரவம். நீ உன் வேலையில் என்னமோ அதை மட்டும் பாரு, அதற்காக என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மீனாவுக்கு தைரியம் சொல்லிவிட்டார்.

இதை பார்த்த கதிர், ராஜியிடம் மீனா அண்ணி கௌரவமாக அரசாங்க உத்தியோகத்தில் வேலை பார்ப்பதால் அப்பாவுக்கு ரொம்பவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. அதே மாதிரி நீயும் கூடிய சீக்கிரத்தில் போலீஸ் ஆகி உன்னுடைய லட்சியத்தை அடைந்து விட்டால் அப்பாவுக்கும் இந்த குடும்பத்திற்கும் ரொம்ப பெருமையாக இருக்கும் என்று ராஜியை ஊக்கப்படுத்தி கதிர் பேசுகிறார்.

எப்பொழுதெல்லாம் கேப் கிடைக்குதோ அப்போதெல்லாம் ராஜியிடம் நைசாக பேசி மனசில் நச்சென்று ஒரு இடத்தை கதிர் தக்க வைத்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து பாண்டியனிடம் சக்திவேல் சவால் விட்டபடி நிச்சயம் பழனிவேலு கல்யாணத்தை நிறுத்துவதில் சதி பண்ண போகிறார். அந்த நேரத்தில் பாண்டியனுக்கு வேறு வழி இல்லாததால் மகள் அரசியை பழனிவேலுக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்.

Trending News