Sandhiya Ragam serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், கார்த்திக்கிடமிருந்து மாயாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜானகி, கார்த்திக் மண்டையில் இரும்பு கம்பியை வைத்து அடித்து விட்டார். அதனால் மயக்கம் போட்டு கீழே விழுந்த கார்த்திக் மண்டையிலிருந்து ரத்தம் போன நிலையில் ஜானகி பயந்து போய்விட்டார். பிறகு அங்கிருந்த மாயா, கார்த்திக்கு மூச்சு இருக்கிறதா என்று பார்த்தார்.
ஆனால் மூச்சு பேச்சு இல்லாமல் கார்த்திக் இருந்ததால் இறந்து போய்விட்டார் என்று முடிவு பண்ணிய நிலையில் ஜானகி மற்றும் மாயா இருவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் கார்த்திகை புதைத்தடலாம் என்று புவனேஸ்வரியின் பண்ணை வீட்டில் பின்னாடி இருக்கும் இடத்தில் புதைத்து விட்டார்கள். ஆனால் இதற்கு இடையில் இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கு இருந்து பார்த்துக் கொண்டிருந்த லிங்கம் செய்த விஷயம் தான் அதிர்ச்சியாகி இருந்தது.
அதாவது ஜானகி அடித்ததால் கார்த்திக்கு எதுவும் ஆகவில்லை, ஜானகி மற்றும் மாயா இருவரும் குழி தோண்டி இருந்த நேரத்தில் கார்த்திக்கு நினைவு திரும்பியது. ஆனால் கார்த்திக்கை உயிருடன் விட்டால் ரகுராம் குடும்பத்தை பழிவாங்க முடியாது என்பதால் இடையில் புகுந்து லிங்கம் கார்த்திக் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்றுவிட்டார்.
ஆனால் இது யாருக்கும் தெரியாததால் கார்த்தி இறப்பிற்கு கதிர் தான் காரணம் என்று போலீஸ் முடிவு பண்ணிவிட்டது. அதற்கு ஏற்ற மாதிரி போலீஸ் அந்த குழியை தோண்டிய பொழுது கார்த்திக் பாக்கெட்டில் கதிரின் பர்ஸ் இருந்தது. உடனே புவனேஸ்வரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ரகுராமிடம் சண்டை போடும் அளவிற்கு அனைவரது முன்னாடியும் கோபத்தை காட்டி விட்டார்.
இதே கோபத்துடன் வீட்டிற்கு வந்த ரகுராம், கார்த்திக்கை ஏன் கொலை பண்ண என்று கதிரை அடித்து விட்டார். கதிர் நான் எதுவும் பண்ண வில்லை என்று சொல்லிய நிலையில் அங்கு கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனாலும் ஜானகி மற்றும் மாயாவிற்கு மட்டுமே தெரியும் நாம்தான் கார்த்திக் இருப்பிற்கு காரணம் என்று. உடனே ஜானகி உண்மையை சொல்ல வரும்போது மாயா ஜானகியை சொல்ல விடாமல் தடுத்து விடுகிறார்.
இதனால் போலீஸ் ரகுராம் வீட்டிற்கு வந்து கதிரை அரெஸ்ட் பண்ணிட்டு ஜெயிலுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள். குற்ற உணர்ச்சியில் அழும் ஜானகிடம், மாயா இதற்கு பின்னாடி ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது. அதை நான் கண்டுபிடித்து நிச்சயம் கதிரை நான் வெளியே கூட்டிட்டு வருவேன் என்று ஆறுதல் படுத்துகிறார்.
இதனை தொடர்ந்து புவனேஸ்வரி வீட்டிற்கு லிங்கம் வருகிறார். வந்ததும் எதுவுமே நடக்காத போல் எல்லாத்துக்கும் காரணம் ரகுராம் குடும்பத்தில் இருக்கும் ஜானகி, மாயா மற்றும் கதிர் தான் என்பதற்கு ஏற்ப சொல்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரி, லிங்கம் கணத்தில் பளார் என்று அறைந்து அங்க நடந்த விஷயத்தையும் லிங்கம் செய்த காரியத்தையும் பற்றி சொல்கிறார். அத்துடன் இறந்து போனதாக நினைத்த கார்த்திக்கும் உயிரோடு வந்து நிற்கிறார்.
எப்படி கார்த்திக் வந்தார் என்ன நடந்தது என்பதை புவனேஸ்வரி, லிங்கம் மற்றும் அவருடைய அண்ணனுக்கு சொல்லப் போகிறார். ஆக மொத்தத்தில் கார்த்திக்கு எதுவும் ஆகவில்லை, அதனால் கதிரும் கூடிய சீக்கிரத்தில் வெளியே வந்து விடுவார். இந்த அனைத்து உண்மைகளுக்கு பின்னாடி இருக்கும் ரகசியத்தை மாயா கண்டுபிடித்து விடுவார்.