Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் செய்த அக்கிரமத்திற்கும் அராஜகத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக நான்கு மருமகள்களும் சேர்ந்து குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்கள். அத்துடன் வெளியே வராதபடி லாயர் மூலம் லாக் பண்ணி வைத்து விட்டார்கள். அதனால் ஜெயிலுக்குள் இருந்த குணசேகரன், சொத்துக்கள் அனைத்தையும் கதிர் பெயருக்கு எழுதி அதை பாதுகாக்கும் படி மாற்றி கொடுத்தார்.
கையில் சொத்து கிடைத்தவுடன் கதிர் நாம்தான் இனி எல்லாம் என்பதற்கு ஏற்ப அடுத்த குணசேகரன் ஆக மாறிவிட்டார். அந்த வகையில் அண்ணனை ஏமாற்றும் வகையில் சில தில்லுமுல்லு வேலைகளை கதிர் பார்ப்பதற்கு துவங்கி விட்டார். இந்த சமயத்தில் ஜெயிலுக்குள் குணசேகரன் கூட இருந்த போஸ்டர் பெரியசாமி அவருடைய இளைய மகளை தர்ஷனுக்கு கட்டி வைக்கலாம் என்று குணசேகரனிடம் சொன்னார்.
அப்படி கல்யாணம் பண்ணி வைத்தால் என்னுடைய சொத்துக்கள் அனைத்துக்கும் வாரிசு உங்க பையன் தர்ஷன் தான். அது மட்டுமில்லாமல் இந்த கல்யாணத்தை வைத்து நீங்கள் ஜாமினில் வெளியே வருவதற்கு நான் ஏற்பாடு பண்ணிடுவேன். அதன் பிறகு நீங்கள் வெளிவந்து விட்டால் நான்கு மருமகளுக்கும் உயிர் பிரச்சினை இல்லை என்பதையும் நிரூபித்து விட்டு நிரந்தரமாக உங்களை வெளியே கொண்டு வந்து விடுவேன் என்று குணசேகரன் மனத்தை போஸ்டர் பெரியசாமி கலைத்து விட்டார்.
உடனே குணசேகரன் இதற்கு சம்மதம் சொல்லிய நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக பண்ண கூறிவிட்டார். அந்த வகையில் தர்ஷன் இடம் பேசி அவருடைய சம்மதத்தையும் வாங்கி விட்டார். இன்னொரு பக்கம் போஸ்டர் பெரியசாமியின் மூத்த மகள் அறிவுக்கரசியை வீட்டிற்கு போக சொல்லி விசாலாட்சி இடமும் சம்மதத்தை வாங்கி விட்டார்.
இந்த அறிவுக்கரசி எதற்கு வந்திருக்கிறார் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் நான்கு மருமகளுக்கு அதிர்ச்சியான விஷயமாக விசாலாட்சி சொன்னது தர்ஷனுக்கு கல்யாணம் ஏற்பாடு குணசேகரன் செய்திருக்கிறான். இது விஷயமாக பேச தான் இவங்க வந்திருக்காங்க என்று சொல்லியதும் நான்கு மருமகளும் அதிர்ச்சியாகி விட்டார்கள். எப்படியும் தர்ஷன் கல்யாணத்தை நிறுத்துவதற்கு இவங்க நான்கு பேரும் சேர்ந்து போராடப் போகிறார்கள்.
அதே நேரத்தில் குணசேகரன் ஆசைப்பட்ட மாதிரி இந்த கல்யாணத்தையும் நிறுத்த வேண்டும், அவர் ஜாமினிலும் வெளியே வரக்கூடாது என்று கதிர் தீர்மானத்துடன் இருக்கிறார். அந்த வகையில் இந்த மருமகள்களின் செயலுக்கு ஏற்ப கதிர் கூட்டணி போட்டு குணசேகரன் வெளியே வராதபடி சில சதிகளை பண்ணப் போகிறார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதற்கு ஏற்ப தர்ஷன் கல்யாணத்தையும் நிறுத்தி விடுவார், குணசேகரன் வெளியே வராதபடியும் கதிர் தடுத்து விடுவார்.
ஆனால் இதற்கிடையில் சிம்மக்கல் ராணி ஆக அறிவுகரசி வந்திருப்பது இந்த ஆட்டத்தையே மாற்றும் விதமாக அமையப் போகிறது. அந்த வகையில் இந்த நான்கு மருமகளும் இனி போராட போவது கதிருடன் மட்டுமில்லை அறிவுக்கரசியுடனும் சேர்ந்துதான். நாளுக்கு நாள் வில்லங்கம் லிஸ்ட் கூடிக் கொண்டே போகிறது என்பதற்கு ஏற்ப குணசேகரன் ஜெயிலுக்குள் இருந்தாலும் இந்த நான்கு மருமகளாலும் லட்சியத்தில் வெற்றி பெற முடியாமல் தத்தளித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கு பேசாமல் பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.