வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

நந்தினியை அண்டி பிழைக்க போகும் கதிர்.. குணசேகரனின் அல்லகையை காலி பண்ணிய எஸ்கேஆர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்னதான் ஆணவத்தின் உச்ச கட்டத்தில் ஆடினாலும் இவருக்கு பின்னாடியில் இருந்து ஒத்து ஊதியது கதிர் தான். கதிர் இருக்கிற தைரியத்தினால் தான் குணசேகரனின் ஆணவம் தலைவிரித்து ஆடியது. அதனால் முதலில் கதிரின் திமிரை அடக்கினால் தான் குணசேகரன் குடும்பத்திற்கு விடிவு காலமே பிறக்கும்.

அத்துடன் எஸ்கேஆர் இன் தம்பி அருண் காலை உடைத்து ஆதிரையை திருமணம் செய்ய விடாமல் சூழ்ச்சி பண்ணியது கதிர் மற்றும் குணசேகரன் தான். இந்த விஷயம் அரசுக்கு தெரிந்ததால், தம்பி படுற கஷ்டம் என்னவென்று குணசேகரனுக்கு தெரிய வேண்டும் என்பதினால் கதிரை அதே மாதிரி கால் உடைத்து விட வேண்டும் என்று வெறிகொண்டு அலைந்தார்.

தாராவின் ஸ்கூலுக்கு கதிரை கூட்டிட்டு வந்தார் நந்தினி. அங்கே போனதும் வழக்கம் போல் கதிர், ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாமல் முட்டாள் தனமாக பேசி அவர்களை அவமானப்படுத்திட்டு வெளியே போய்விட்டார். போன இவருக்கு வெளியில் விழுந்த தர்ம அடிதான் ஹைலைட்டாக இருந்தது. என்னதான் ஒருவர் அடி வாங்கும் பொழுது மனதிற்குள் பாவமாக இருந்தாலும் கதிரை பொருத்தவரை இது தேவைதான் என்று சொல்லும் அளவிற்கு கொடூரமானவராகத் தான் இருந்திருக்கிறார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் பொண்டாட்டி பண்ணிய காரியம்.. ஜெனிலியா, ஸ்ரேயா பேசியது எல்லாம் உண்மை இல்லையா?

அதன் பின் இவர் அடி வாங்கினதை பார்த்ததும் நந்தினி துடிதுடித்து ஓடிப் போய் கதிரை பார்த்து அழுதது ரொம்பவே உருக்கமாக இருந்தது. இதனை தொடர்ந்து கதிரை ஹாஸ்பிடல் சேர்த்து விடுகிறார் நந்தினி. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிறகு குணசேகரன் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் வந்துவிடுகிறார்கள். ரேணுகா, ஜனனி, நந்தினி, சக்தி அனைவரும் இருக்கும் முன்னணியில் கதிரின் அம்மா ஏதோ நந்தினி தான் தப்பு பண்ண மாதிரி குற்றம் சாட்டி பேசுகிறார்.

கதிருக்கு விழுந்த அடியை பார்க்கும் பொழுது ஏதோ கண்டிப்பாக கை கால் உடைகிற அளவுக்கு சம்பவம் நடந்திருக்கிறது. அதனால் ஆபரேஷன் பண்ண வேண்டும் என்கிற சூழ்நிலை வருகிறது. இதில் மருத்துவர்கள் மனைவி கையெழுத்து போட்டால் மேற்கொண்டு ஆபரேஷன் பண்ணலாம் என்று கூறுகிறார்கள். அப்பொழுது ஞானம், நந்தினிடம் கையெழுத்து போட சொல்கிறார்.

அதற்கு நந்தினி ரத்த சொந்த பந்தம் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சீங்களா கையெழுத்து போடுங்க செல்லுபடி ஆகுதா என்று பார்ப்போம் என குத்தி காட்டி பேசுகிறார். ஆக மொத்தத்தில் இனி நந்தினி தயவு இல்லாமல் கதிர் வாழ முடியாது என்கிற நிலைமைக்கு கை கால் அடிபட்டு இருக்கிறது. இதற்குப் பிறகு உண்மையான பாசம் என்னவென்று கதிர் புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதிர் திருந்தினால் மட்டுமே குணசேகரனின் ஆட்டத்தை க்ளோஸ் பண்ண முடியும்.

Also read: எதிர்நீச்சல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரம்.. சீன் போடும் ஜனனிக்கு இவ்வளவு சம்பளமா?

Trending News