செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

குணசேகரனுக்கு எமனாக நிற்க போகும் ஆசை தம்பி.. பொண்டாட்டி பிள்ளையிடம் தஞ்சமடையும் கதிர்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு தற்போது குறைந்த நிலையிலும் எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வந்து சுவாரசியமாக கதை அமைந்து வருகிறது. அதிலும் ஆதிரை எடுத்த முடிவால் மொத்தமாக குணசேகரன் ஆட்டமே க்ளோஸ் என்கிற மாதிரி ஆடிப் போய்விட்டார். அதாவது ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் தாண்டி தன் கௌரவத்திற்கு எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது.

அத்துடன் நான் யாரிடமும் தோற்கக் கூடாது என்ற வறட்டு கௌரவத்தால் தன் மகள் தர்ஷினியை கரிகாலன் உடன் கல்யாணத்தை பண்ணுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சின்ன பிள்ளைத்தனமாக தர்ஷினி ஒரு பையனை காட்டி நான் லவ் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த குணசேகரன் அந்த பையனை கண்ணா பின்னான்னு திட்டி வெளியே அனுப்பி விட்டார்.

ரேணுகா, தர்ஷினிடம் வந்து கேட்ட பொழுது இதெல்லாம் அவருடைய வாயை அடைப்பதற்காக நான் ஏற்பாடு பண்ணிய விஷயம் தான். மற்றபடி என்னுடைய நோக்கம் வாழ்க்கையில் ஜெயித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதுதான் என்று தெளிவான பதிலை ஈஸ்வரி, ரேணுகா மற்றும் ஜனனிடம் சொல்லிவிட்டார். அடுத்ததாக கரிகாலன் என்ன முடிவில் இருக்கிறார் என்று தெரியாத நிலையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கலாட்டா பண்ணுகிறார்.

Also read: டோட்டலா டேமேஜ் ஆன எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்.. சன் டிவி குடும்பத்துக்குள்ளேயே நடக்கும் வெறித்தனமான போட்டி

கரிகாலன் , ஆதிரையே மறக்க முடியாமல் இப்படி பண்ணுகிறாரா, இல்லை என்றால் தர்ஷினியும் கல்யாணத்துக்கு ஒத்துக்கவில்லை என்பதற்காக வேதனையில் இந்த மாதிரி அலப்பறை செய்கிறாரா என்பது குழப்பத்திலேயே இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கதிரை வீட்டில் வைத்து நான் நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன் என்று மருத்துவர்களிடம் நந்தினி கூறிய பின்பு வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

வந்த பிறகு கதிருக்கு என்னெல்லாம் செய்யணும்னு அதையெல்லாம் ஒரு மனைவி என்கிற முறையில் உணர்வுபூர்வமாக செய்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது கதிர் கொஞ்சம் முறைத்துக் கொள்கிறார். இதற்கிடையில் நந்தினியின் மகள் தாரா பாப்பாவும், அப்பாவின் அன்புக்கு ஏக்கத்துடன் ஏங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை காட்டும் விதமாக கதிரிடம் பாசத்தை கொட்டி சாப்பாட்டை ஊட்டி விடுகிறார்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே கண்களில் இருந்து கண்ணீர் மழை கொட்டுகிறது. கண்டிப்பாக கதிர் இதையெல்லாம் கடந்து வந்த பிறகு ஒரு நல்ல மனிதனாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் தன் மனைவி பிள்ளை என்று அவர்கள் பக்கம் நின்று குணசேகரனுக்கு ஒரு எமனாக நிற்கவும் போகிறார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் பொண்டாட்டி பண்ணிய காரியம்.. ஜெனிலியா, ஸ்ரேயா பேசியது எல்லாம் உண்மை இல்லையா?

Trending News