புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியன் தலையில் இடியை தூக்கி போட போகும் மச்சான்.. ராஜி கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் தவிக்கும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் குடும்பத்திற்குள் மருமகளாக வந்த மீனா மற்றும் ராஜியின் காம்போ சூப்பராக இருக்கிறது. அதிலும் கோமதியுடன் சேர்ந்து பண்ணும் அட்ரஸ்சிட்டி ரசிக்கும் படியாக இருக்கிறது. ஆனால் மூன்றாவதாக வந்த தங்கமயில் பொய்யும் பித்தலாட்டம் பண்ணி குடும்பத்திற்குள் பிரச்சனையை உண்டாக்க முயற்சி செய்தார்.

ஆனால் கடைசியில் தங்கமயில் செய்த ஒரு விஷயம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதித்து பாண்டியன் மற்றும் சரவணன் வச்சு செஞ்சு விட்டார்கள். இதனால் கொஞ்சம் அடங்கிப் போன தங்கமயில், அம்மாவிடம் பேசுவதை நிப்பாட்டி விட்டு மீனா மற்றும் ராஜிடம் கூட்டணி போட்டு விட்டார். அந்த வகையில் தற்போது மும்மூர்த்திகளாக இருக்கும் மூன்று மருமகளின் ராஜ்ஜியம் நன்றாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து அவ்வப்போது டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போட்டுக் கொண்டிருந்த ராஜி மற்றும் கதிருக்கு காதல் வந்துவிட்டது. ஆனால் அந்த காதலை வெளிப்படுத்த முடியாமல் மனதிற்குள் வைத்திருக்கிறார்கள். அதனால் தான் கதிர் கஷ்டப்படும் போதெல்லாம் ராஜியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதே மாதிரி ராஜி கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கதிர் முகம் ரொம்பவே வாடி போய் விடுகிறது.

அப்படித்தான் இப்பொழுது ராஜியின் அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லை என்ற விஷயம் கதிருக்கு தெரிந்து விட்டது. இதனால் ராஜி ரொம்பவே கஷ்டப்படுவாள் என்று நினைத்து வருத்தப்படுகிறார். அந்த வகையில் ராஜிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக கதிர் பேசுகிறார். அப்பத்தா நெஞ்சுவலி வந்ததால் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார் என்ற விஷயம் செந்தில் மூலம் மீனாவுக்கு தெரிந்து விட்டது.

இதனால் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு கிளம்பி போன மீனாவை பார்த்ததும் கோமதி நீ என் சீக்கிரமா வந்து விட்டாய் என்று கேட்கிறார். உடனே நீ வந்ததும் நல்லதுக்கு தான் எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கு என்று சொல்லிய நிலையில் மீனா எனக்கு தெரியும் என்று அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லாத விஷயத்தை பற்றி சொல்ல போகிறார். இதனால் ராஜி மற்றும் கோமதி அதிர்ச்சியாகி கவலைப்பட போகிறார்கள்.

அப்பொழுது இவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக கதிர், செந்தில் மற்றும் மீனா மூன்று பேரும் சேர்ந்து சமாதானப்படுத்துகிறார்கள். பிறகு கோமதி, அம்மாவிற்காக ஆசை ஆசையாக சமைத்து பழனிச்சாமி இடம் கொடுக்கிறார். இதை தெரிந்தும் பாண்டியன் ஒன்னும் சொல்லாமல் மாமியார் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அதனால் சாப்பாட்டை யாருக்கும் தெரியாமல் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

இந்த சூழ்நிலையில் பாண்டியன் மனசு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் நிலையில் குமரவேலு மற்றும் சக்திவேல் சேர்ந்து மொத்தமாக பாண்டியன் தலையில் இடியை இறக்கும் விதமாக பாண்டியனின் மகளை வலுக்கட்டமாக குமரவேலு கல்யாணம் பண்ணப் போகிறார். இதனால் அடுத்து இரண்டு குடும்பத்திற்கும் மிகப்பெரிய தீராத பாகையாக மாறப்போகிறது.

அந்த வகையில் ராஜி மூலம் அண்ணன் குடும்பத்திற்கு எந்தவித களங்கமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று யோசித்து கோமதி எடுத்த முடிவின் காரணமாக அரசின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கப் போகிறது.

Trending News