புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கதிர் கரிகாலன் கண்ணில் மண்ணை தூவும் ஜனனி.. முட்டாள் பீசாக இருக்கும் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி பிளான் பண்ணியபடி குணசேகரனிடம் பொய் சொல்லி ஆதிரையை கோவிலுக்கு கூட்டி வந்து விடுகிறார். ஆனால் இவருடன் தண்ணி வண்டி கதிரையும் மற்றும் முட்டாள் கரிகாலனையும் குணசேகரன் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் அவர்களின் கண்களில் எப்படியாவது மண்ணை தூவி விட்டு ஆதிரையை கூட்டிப் போக வேண்டும் என்று நந்தினி மற்றும் ரேணுகா பிளான் பண்ணுகிறார்கள். அதன் விளைவாக கரிகாலனிடம் கண்ணை மூடிக்கொண்டு இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள் என்று சொல்கிறார்கள்.

Also read: ஒட்டுமொத்த பழியையும் மூர்த்தி மேல் போடும் விஷப்பூச்சி.. எமோஷனலாக உடைந்து போகும் கதிர்

இதையும் அந்த முட்டாள் பீசாக இருக்கும் கரிகாலன் நம்பி கண் மூடிக் கொண்டு ஆதிரைக்கும் எனக்கும் நல்லபடியாக பிரச்சனை இல்லாமல் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். இதுதான் நல்ல சான்ஸ் என்று மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி விடுகிறார்கள்.

இதன் பிறகு தான் ஆட்டமே சூடு பிடிக்கப் போகிறது. இவர்கள் நம்பி போகும் அந்த கோவிலுக்கு ஆதிரையை திருமணம் செய்து கொள்ள கௌதம் அருணை கூட்டிட்டு வருவாரா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: குணசேகரனுக்கு எதிராக மொத்த வித்தையும் இறக்கும் விசாலாட்சி.. வாயடைத்து நிற்கும் ஜான்சி ராணி

இதில் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். ஒன்று இதில் ஜீவானந்தம் நுழைந்து அருணை வைத்து எஸ்கேஆர் இடம் பிளாக்மெயில் செய்யலாம். இல்லையென்றால் கௌதமை பிடிப்பதற்காக போலீசார் இடையில் புகுந்து ஆட்டையை குழப்பி விடலாம்.

எது எப்படியோ சீக்கிரத்தில் யார் கூடயாவது ஆதிரைக்கு திருமணத்தை நடத்தி முடித்து விடுங்கள். அத்துடன் ஜீவானந்தம் கேரக்டரை இன்னும் சுவாரசியமாக கொண்டு வந்து அவர் இந்த நாடகத்திற்கு எவ்வளவு முக்கியமான ஒரு கேரக்டர் என்பதை கூடிய விரைவில் கொண்டு வாருங்கள்.

Also read: நிச்சயதார்த்தத்தை பற்றி கவலைப்படும் கோபி.. பேசியே உஷார் பண்ணின பழனிச்சாமி

Trending News