புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஈஸ்வரியை பழிக்கு பழி வாங்க கதிர் பற்ற வைத்த நெருப்பு.. உனக்குப் பிறந்தவளா? வெளுத்து வாங்கும் ஆதி குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அனைவரது ஃபேவரைட் நாடகமாக மக்கள் மனதில் ஒய்யாரத்தில் குடி புகுந்து விட்டது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் கதை ரொம்பவே சுவாரசியமாகவும், எதிர்பார்க்காத திருப்பங்களும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதில் அண்ணன் இல்லை என்ற கோபத்தில் கதிர் ரொம்பவே அராஜகத்தின் உச்சகட்டத்திற்கு சென்று அண்ணி என்று கூட நினைக்காமல் வாய்க்கு வந்தபடி மோசமான வார்த்தையால் தாக்கினார்.

இதுவரை பொறுத்துப் போய்க் கொண்டிருந்த ஈஸ்வரி அவருடைய கேரக்டரை பற்றி பேசியதும் ஆக்ரோஷமான கோபத்தை வெளிக்காட்டும் விதமாக கதிர் கண்ணத்தை பழுக்க வைத்தார். அப்ப வாயடைத்து போன கதிர் தான் இப்போது வரை கொஞ்சம் அடங்கி இருக்கிறார். அத்துடன் சக்தி தன்னுடைய அண்ணன் எங்கே இருக்கிறார் என்ற விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காக கதிர் மற்றும் ஞானத்தை போலீஸிடம் சிக்க வைத்து தர்மஅடியை வாங்க வைத்தார்.

Also read: வில்லத்தனத்தில் கதிகலங்க வைத்த ஆதி குணசேகரன்.. மொத்தமாக மாறிய கேரக்டர், திசை மாறும் எதிர்நீச்சல்

அப்பொழுது தம்பிகள் சிக்கலில் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் குணசேகரன் அவர்களை காப்பாற்றுவதற்காக வந்தார். ஒரு வழியாக பிரச்சனை எல்லாம் சமாளித்து தம்பிகளை குணசேகரன் காப்பாற்றி விட்டார். அடுத்ததாக வீட்டில் நீங்கள் இல்லை என்றதும் அங்கு இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் ஓவராக துள்ளிக் கொண்டு எங்களை அவமானப்படுத்தினார்கள் என்று கதிர் அண்ணனிடம் போட்டுக் கொடுக்கிறார்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரிடம் அடி வாங்கினதையும் மனதில் வைத்துக் கொண்டு வெண்பா வந்த விஷயத்தை குணசேகரனிடம் சொல்லி விடுகிறார். இதன் பிறகு வீட்டிற்கு போகும் குணசேகரன் ஒட்டுமொத்தமாக அனைவரையும் அதட்டி உருட்டி வைக்கப் போகிறார். அத்துடன் நீ யாருடைய குழந்தையை நான் இல்லாத போது வீட்டிற்கு கூட்டிட்டு வந்தாய்.

Also read: ரமணா பட பாணியில் இறந்த குணசேகரனுக்கு உயிர் கொடுத்து வரும் எதிர்நீச்சல்.. கதிர், ஞானத்தை விட நல்லவரா?

அது என்ன உன்னுடைய மகளா என்று குணசேகரன், ஈஸ்வரியை வெளுத்து வாங்கப் போகிறார். என்னதான் எல்லாத்துக்கும் பதிலடி கொடுத்து வந்தாலும் குணசேகரன் முன் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தோற்றுக் கொண்டே தான் வருகிறார்கள். அந்த வகையில் ஈஸ்வரியை தொடர்ந்து நந்தினி மற்றும் ரேணுகாவையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்க போகிறார்.

கடைசியில் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஜனனி தான் காரணம் என்று குணசேகரனின் கோபம் அனைத்தும் சக்தி மனைவி மீது திரும்பப் போகிறது. இதையெல்லாம் சமாளித்து குணசேகரனின் அராஜகத்தை ஒடுக்கி, எப்படி அந்த வீட்டில் உள்ள பெண்கள் சுதந்திரமாக முன்னேறப் போகிறார்கள் என்பதை பார்க்க தான் மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: மரண மாஸ் என்ட்ரி கொடுத்த ஆதி குணசேகரன்.. அடுத்த சம்பவத்துக்கு தயாரான எதிர்நீச்சல்

Trending News