புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு வந்த கதிர்-முல்லை.. வாயைப் பிளந்த மீனா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆபத்தில் இருந்த கதிருக்கு உதவி செய்ய அவருடைய அண்ணன் தம்பிகள் ஓடோடி வந்தனர். கதிரை அடிக்க வந்த அடியாட்களை எல்லாம் துவைத்தெடுத்தம் மூர்த்தி, ஜீவா, கண்ணன் மூவரும் இறுதியில் கதிரை பத்திரமாக அவருடைய வீட்டில் வந்து விட்டார்கள்.

அந்த சமயம் கதிர் தன்னுடைய அண்ணன் மீண்டும் தன்னை வீட்டிற்கு அழைக்க மாட்டாரா என ஏங்குகிறார். தம்பியின் உணர்வுகளை புரிந்து கொண்ட மூர்த்தியும் கதிரை மீண்டும் வீட்டுக்கு வரச் சொல்கிறார். உடனே சந்தோசத்தில் கதிர்-முல்லை இருவரும் மூர்த்தியுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு செல்கின்றனர்.

Also Read: புது மாப்பிள்ளை சோக்குக்கு திரிந்த கோபி.. கடைசியில் ஆப்பு வைத்த செழியன்

அங்கு தனம் அவர்களை ஆராத்தி எடுத்து வீட்டிற்கு அழைக்கிறார். வீட்டிற்கு வந்ததும் கதிர் போட்டியில் வெற்றி பெற்று கிடைத்த பரிசுத் தொகை ஆன 10 லட்ச ரூபாய் காசோலையை தனத்திடம் கொடுக்கிறார்.

5 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டு தான் வீட்டுக்கு வருவேன் என கதிர் சபதம் செய்த நிலையில், அதை செய்தும் காட்டினார் என்று மீனா வாயை பிளக்கிறார்.  ஒருவேளை கதிர்முலை இருவரும் 5 லட்சம் பணத்தை கொடுக்காமல் வீட்டிற்குள் வந்து இருந்தார்கள் என்றால், மீனா அவர்களை  குத்திக் காட்டியே ஒரு வழியாக்கி இருப்பார்.

Also Read: உண்மையை போட்டு உடைத்த கண்ணம்மா.. கதி கலங்கி போய் நிற்கும் பாரதி குடும்பம்

ஆனால் அதற்கு இப்போது  வழிவலி இல்லாமல் போனது. கதிர் கொடுப்பதாகக் சொன்ன 5 லட்சத்துடன் கூடுதலாக 5 லட்சத்தை கொடுத்து குடும்பம் கட்டும் புதிய வீட்டிற்கு அச்சாரம் போட்டுள்ளனர். இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நீண்ட நாட்களாக கதிர்-முல்லை பிரிந்து மீண்டும் குடும்பத்துடன் இணைந்து இருப்பது சின்னத்திரை ரசிகர்களை குதூகலப் படுத்தி உள்ளது.

எனவே கூட்டுக் குடும்ப கதை அம்சத்தை கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவ்வளவு நாட்களாக முல்லை-கதிர் இருவரையும் வைத்து கதை ஒட்டிய நிலையில், தற்போது புதிதாக ஒரு பிரச்சினையை குடும்பத்தில் அடுத்த வாரம் வெடிக்க போகிறது.

Also Read: டாஸ்கில் அலட்சியம், விதி மீறல்.. இன்றைய பிக்பாஸில் கொதித்துப்போய் எச்சரித்த கமல்

Trending News