திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சந்தியா ராகம் சீரியலில் தனா கழுத்தில் தாலி கட்டிய கதிர்.. தோற்றுப் போன கார்த்திக், மாயா எடுத்த அதிரடி முடிவு

Sandhiyaragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் சீரியலில், மாயா சீனுவின் கல்யாணம் பல போராட்டங்களுக்கு நடுவில் நல்லபடியாக முடிந்து விட்டது. இதனை அடுத்து தனா கழுத்தில் தாலி கட்ட கார்த்திக் தயாராக இருக்கிறார். ஆனால் கார்த்திக் ரொம்பவே மோசமானவர், தனாவை கல்யாணம் பண்ணி ரகுராமை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தான் ஒட்டு மொத்த குடும்பமும் இந்த சம்பந்தத்தை பண்ணுகிறார்கள் என்று மாயாவிற்கு தெரிந்து விட்டது.

ஆனால் இந்த உண்மையை யாரிடமும் சொல்ல முடியாமல் மாயா தவித்துக் கொண்டு வருகிறார். அப்பொழுது கார்த்திக் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அவருக்கு இப்பொழுது குழந்தை பிறந்திருக்கிறது என்ற உண்மை கதிர் மூலம் மாயாவிற்கு தெரிந்து விட்டது. அதன்படி மாயா பிளான் பண்ணி கார்த்திகை ஆஸ்பத்திரிக்கு வரவைத்து அந்தப் பெண்ணிடம் பேசும் பொழுது மாயா அதை வீடியோ எடுத்து விடுகிறார்.

இதை தெரிந்து கொண்ட கார்த்திக், மாயாவை தனியாக கூப்பிட்டு நீ எடுத்திருக்கும் வீடியோவை யாரிடமாவது போட்டுக் காட்டினால் என்னிடம் இருக்கும் வீடியோவும் வெளிவந்து விடும் என்று சொல்கிறார். என்ன வீடியோ என்று தெரியாத மாயா உன்னிடம் அப்படி என்ன வீடியோ இருக்கிறது என்று கேட்கிறார். உடனே கார்த்திக், வீடியோவை போட்டு காட்டுகிறார்.

அதில் தனத்தின் பிறந்தநாளுக்கு கார்த்திக்குடன் போகும்பொழுது தனத்துக்கு தெரியாமல் தனத்தை தவறாக வீடியோ எடுத்து அதை போனில் கார்த்திக் வைத்திருக்கிறார். நீ என்னை பற்றி விஷயங்களை வெளியே சொன்னால் நான் இந்த வீடியோவை அனைவருக்கும் காட்டி சமூக வலைதளங்களில் போட்டு விட்டுருவேன் என்று பிளாக்மெயில் பண்ணினார்.

பிறகு மாயாவுக்கு இந்த கல்யாணத்தை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரியாத நிலையில் கார்த்திக் தலையில் அடித்து மயக்கம் அடைய வைத்து விடுகிறார். அதன்பின் முகூர்த்தத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று அனைவரும் கார்த்திகை தேடி அலைகிறார்கள். அதற்குள் மயக்கம் தெளிந்த கார்த்திக், மணமேடைக்கு வந்து விடுகிறார். இதனைப் பார்த்த மாயா எப்படி கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்து நிலையில் அதிரடியாக ஒரு முடிவை எடுத்து விடுகிறார்.

அப்பொழுது ஆஸ்பத்திரியில் இருக்கும் கதிருக்கு போன் பண்ணி நீ உடனே மண்டபத்துக்கு வெளியே வந்து விடு என்று மாயா கூப்பிடுகிறார். அப்படி மண்டபத்துக்கு வெளியே வந்து நிற்கும் கதிரிடம், மாயா கேட்பது உன்னால் மட்டும் தான் தனத்தின் வாழ்க்கையை காப்பாற்ற முடியும். நீ தணத்திற்காக என்ன வேணும்னாலும் பண்ணுவியா என்று கேட்கிறார்.

உடனே கதிர், சொல்லு மாயா நான் தனம் வாழ்க்கைக்காக என்ன வேணாலும் பண்ணுவேன். அதற்காகத்தான் இப்பொழுது போராடுகிறேன் என்று சொல்கிறார். அப்படி என்றால் நீ தனத்தின் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று மாயா ஐடியா கொடுக்கிறார். அதன்படி கதிரும் சம்மதித்த நிலையில் மண்டபத்திற்கு கதிரை கூட்டிட்டு போவதற்காக புர்காவை போட்டுவிட்டு வா என்று சொல்கிறார்.

மாயா சொன்னபடி கதிரும் மண்டபத்திற்குள்ளே நுழைந்து கல்யாண மேடைமேல் ஏறிவிட்டார். அந்த நேரத்தில் கார்த்திக் தாலிக்கட்டும் பொழுது மாயா கொடுத்த தாலியை எடுத்து கதிர், தனத்தின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். இதை எதிர்பார்க்காத ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். ஆனால் தனம், கார்த்திகை தான் கல்யாணம் பண்ணனும் என்று பிடிவாதமாக இருந்தார்.

தற்போது இந்த திடீர் கல்யாணத்தால் தனம், கதிரை வெறுக்க போகிறார். அத்துடன் இதற்கு காரணம் மாயா தான் என்ற உண்மை தெரிந்து விட்டால் தனம், மாயா மீதும் கோபப்படுவார். ஆனால் மாயா, தனத்தின் வாழ்க்கைக்காக தான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்கிறார் என்பது போகப் போக தான் புரியும். ஆக மொத்தத்தில் தனம் வாழ்க்கையை பகடகாயாக வைக்க நினைத்த கார்த்திக் குடும்பத்திற்கு இது மிகப்பெரிய தோல்வியாக முடிந்து விட்டது.

Trending News