புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு சென்ற கதிர்.. சல்லி சல்லியாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அனைவரும் மிஸ் பண்ணாமல் பார்க்கக்கூடிய தொடராக வருகிறது. இதில் அண்ணன் தம்பிகள் என்னதான் பிரிந்து இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் பாசம் மட்டும் குறையவே இல்லை. அத்துடன் இப்பொழுது கண்ணன் மற்றும் ஜீவா இருவருமே அண்ணன் கூடவே போய் இருந்திடலாமா என்று எண்ணம் அவர்களுக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது.

அதனால் அவ்வப்போது ஜீவா மற்றும் கண்ணன், கதிர் ஹோட்டலுக்கு போய் இவர்கள் மூன்று பேரும் அடிக்கடி பேசிக் கொண்டு வருகிறார்கள். இதனால் கூடிய சீக்கிரம் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து நிலையில் புதிதாக ஒரு பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. பிரச்சனை என்றாலே அது அந்த கண்ணன் பையனால் தான் வரும்.

Also read: இவ மானங்கெட்ட கேள்வி கேட்டாலும் கோபமே வர மாட்டேங்குது.. குணசேகரன் பம்மும் ஒரே ஆன்ட்டி

ஐஸ்வர்யாவின் பேராசையால் கடனுக்கு மேல் கடன் வாங்கி அதை சரியாக கெட்ட கூட முடியாத நிலையில் மறுபடியும் ஐஸ்வர்யாவின் சித்தி மூலம் வட்டிக்கு கடன் வாங்கி வளைகாப்பை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு சரியான ஆப்பு பேங்க் மேனேஜர்கள் மூலம் வந்துவிட்டது.

அதாவது ஐஸ்வர்யா, கண்ணன் மற்றும் சித்தி இவர்கள் மூவரும் வீட்டில் இருக்கும்போது கடன் கொடுத்த மேனேஜர்கள் இவருடைய வீட்டிற்கு வருகிறார்கள். வந்து அநாகரிகமாக பேசியதோடு மட்டுமில்லாமல் ஐஸ்வர்யாவை தவறாகவும் பேசியதால் ஆவேசப்பட்டு கண்ணன் அவர்களை அடித்து விடுகிறான். இதனால் மேனேஜர்கள் திருப்பி கண்ணனை வெளுத்து வாங்கிட்டார்கள்.

Also read: பாக்யாவை அலைக்கழிக்கும் ராதிகா.. கடைசியில் கிடைத்த மிகப்பெரிய ஆப்பு

பிறகு இதை கண்ணன், கதிரிடம் சொல்ல தம்பி பாசத்தால் ஓவராக பொங்கி பேங்க் மேனேஜரை தெருவில் வைத்து கதிர் அடித்து விடுகிறார். அடுத்து கண்ணன் ஐஸ்வர்யா வளைகாப்பை நடத்துவதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து அனைவரும் கிளம்பி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் போலீஸ் திடீரென்று அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து கதிர் பேங்க் மேனேஜரை அடித்ததற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போகிறார்கள். இதை பார்த்த முல்லை ரொம்பவே ஆவேசமாக இருக்கிறார். இதனால் மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிளவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக முல்லை, ஐஸ்வர்யா கண்ணனிடம் சண்டை போட வாய்ப்பு இருக்கிறது.

Also read: கோபியின் வயிற்றெரிச்சலும் பொறாமையும்.. பாக்கியா பழனிச்சாமியின் தரமான சம்பவம்

Trending News