வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டாம் அண்ட் ஜெரியாக இருந்த ராஜிவை திருமணம் செய்த கதிர்.. பாக்யா தலைமை நடந்த ரகசிய கல்யாணம்

Pandian Stores and Bhakkiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 நாடகம் தற்போது இணைந்து சங்கமமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அனைவரும் ஒட்டுமொத்தமாக திருச்செந்தூர் கோவிலில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையில் ராஜிக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் காதலித்த காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

ராஜியை கூப்பிட வந்த காதலன் அவருக்கு தெரியாமலேயே வீட்டில் இருக்கும் நகை அனைத்தையும் கைப்பற்றி ராஜியை கூட்டி வந்து விடுகிறார். பிறகு ராஜியிடம் திருச்செந்தூர் கோவிலில் போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று அங்கே கூட்டிப் போகிறார். போன இடத்தில் ஒரு ஹோட்டலில் ராஜியை தங்க வைத்துவிட்டு நகையை திருட்டுத்தனமாக எடுத்து விட்டு அப்படியே எஸ்கேப் ஆகி விடுகிறார்.

இவரை காதலித்தது நகைக்கு பணத்துக்கும் தான் என்ற விஷயம் ராஜிக்கு தெரிய வரும் பொழுது ஏமாற்றத்துடன் நிற்கிறார். பிறகு அங்கு இருக்கும் மீனா மற்றும் கோமதி கண்ணுக்கு பட்டதும் நடந்த விஷயங்கள் அறிந்து திரும்பி வீட்டிற்கு கூட்டிட்டு போனால் பிரச்சனை தான் என்பதற்காக ஒரு முடிவு பண்ணுகிறார்கள். அந்த சமயத்தில் மீனா கொடுக்கும் ஐடியா மூலம் கோமதி கதிரை திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார். தற்போது பாக்கியா குடும்பத்திற்கு முன் இந்த திருமணம் நடைபெற போகிறது.

Also read: யாருக்கும் தெரியாமல் குழந்தையை தூக்கிட்டு போகும் பாக்கியாவின் மாமி.. வீட்டை விட்டு வெளியேறிய ராஜி

இவர்கள் அனைவரும் திருச்செந்தூரில் இருக்கும் கோவில் முன்னாடி ராஜிக்கும் கதிருக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். இதுவரை டாம் அண்ட் ஜெரியாக சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைய போகிறார்கள். இது தெரியாமல் ராஜுவின் அப்பா பாண்டியனை ஒரு அவமான சின்னமாகவும் வீட்டை விட்டு பெண்ணை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணினாய் என்று அவமானப்படுத்தி வருகிறார்.

தற்போது இவருடைய வீட்டில் இவருக்கு பெருத்த அவமானமாக பொண்ணு ஓடிப் போயி எதிரி வீட்டு பையனுடன் கல்யாணத்தை பண்ணி விட்டார். இது தெரிந்தால் வீடே ரணகளமாக மாறப்போகிறது. அதை நேரத்தில் பாண்டியனுக்கும் இந்த விஷயம் தெரிந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போகிறார். ஏற்கனவே கதிர் மீனா கல்யாணத்தால் மூத்த பையன் சரவணனுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்கிறது.

பொண்ணு கேட்கிற இடத்தில் எல்லாம் மூத்த பயண வச்சிட்டு ரெண்டாவது பையனுக்கு ஏன் கல்யாணம் பண்ணினீர்கள் என்று சரவணன் உதாசீனப்படுத்துகிறார்கள். தற்போது கடைசி பையன் கதிருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்றால் சரவணன் கெதி என்னவாக இருக்கும். இதற்கு பாண்டியன் என்ன முடிவு பண்ணப் போகிறார் என்பது மீதமுள்ள கதையாக இருக்கும்.

Also read: செழியன் உடன் ஒன்று சேர போகும் பாக்யாவின் மருமகள்.. இதை பார்த்தும் திருந்தாத கோபி

Trending News