வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கத்ரீனா கைப்பை காதலித்த 3 நடிகர்கள்.. ஒரு வழியா வாழ்க்கை ஓகே ஆயிடுச்சாம்

சாதாரண வாழ்க்கையிலேயே இரண்டு மூன்று காதல்கள் இருக்கும்போது பிரபலங்களாக இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு காதல் கிசுகிசுக்கள் வருவது ஒன்றும் புதிதான விஷயமில்லை. அந்தவகையில் நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் காதல் விஷயங்களில் கன்னாபின்னாவென இருந்துள்ளனர்.

அதுவும் பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம். போனில் சிம்கார்டை மாற்றுவது போல இஷ்டத்திற்கு ஆளை மாற்றி விடுவார்கள். அப்படி ஒரு காரியத்தைத் தான் கத்ரினா கைப் செய்து வருகிறார்.

பாலிவுட் நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பரிட்சயமான நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். முப்பத்தி எட்டு வயதான கத்ரினா கைப் இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் மூன்று காதல்களை பார்த்துவிட்டார்.

முதலாவது காதலர்தான் சல்மான் கான். சல்மான்கான் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் நீண்ட வருடமாக காதலித்து வந்தனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

அதைத்தொடர்ந்து கத்ரினா கைப் இரண்டாவதாக ரன்பீர் கபூர் என்பவருடன் காதலில் இருந்தார். இவருடனும் சில வருடங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்த கரீனா கபூர் அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரிந்தார்.

தற்போது மூன்றாவது முறையாக பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் என்பவரை காதலித்து வருகிறாராம். இவர்கள் இருவருக்கும் காதல் முற்றி நிச்சயதார்த்தம் வரை சென்று விட்டதாக கூறுகின்றனர். இருந்தாலும் நடிகர் நடிகைகள் அல்லவா. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

katrina-kaif-cinemapettai
katrina-kaif-cinemapettai

Trending News