இந்தியாவின் முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். மேலும் இவர் தன்னுடைய வசீகர தோற்றத்தாலும், அனைவருடனும் சகஜமாக பழகும் குணத்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.
இவ்வாறிருக்க என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் பாலிவுட்டில் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட நடிகையும் இவர் தான். அதைப்போல் சல்மான்கான் ஹிந்தி திரையுலகில் டாப் ஒன் நடிகர் ஆவார். கத்ரீனா கைஃப்- இன் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருவரும் டேட்டிங் செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தன.
இதையடுத்து ரன்பீர் கபூருடன் கத்ரீனா காதலில் விழுந்ததால் சல்மான்கானுடன் இவருடைய உறவு முறிக்கப்பட்டது. ஏனென்றால் ரன்பீர் கபூருடன் கத்ரீனா ஊட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.
அதற்கு முன்புதான் கத்ரீனா சல்மான்கானுடன் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பு கத்ரீனா சல்மான்கானுக்கு, “எல்லாம் முடிந்துவிட்டது. இனி நமக்கு இடையே இருப்பது நட்பு மட்டும்தான்” என்ற குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
இந்த மெசேஜை பார்த்த சல்மான் கோபமடைந்து படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துபோக முடிவு செய்ததாக கத்ரீனாவில் நண்பர் கூறினார். இதனைக்கேட்ட கத்ரீனாவினால் பயத்தில் சல்மான்கானை எதிர்கொள்ள முடியாமல் திணறி உள்ளார்.
மேலும் சல்மான் கானுக்கு அவருடைய நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும், அறிவுறுத்தலின் பெயரில் அந்த முடிவை சல்மான்கான் கைவிட்டு உள்ளார். மேலும் சல்மான் கானின் இத்தகைய கோபத்திற்கு ரன்பீர் கபூருடன் கத்ரீனா கைஃப் நெருக்கமாக இருப்பது மட்டும் காரணமல்ல.
அந்த சமயத்தில் சல்மான்கான் விரத்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் பல வருட பிரிவுக்கு பிறகு, தற்போது வரை சினிமா துறையில் சல்மான் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் இன்றும் நண்பர்களாக இருக்கிறார்கள். இதெல்லாம் பாலிவுட்டில் சகஜமப்பா என்பதே ரசிகர்களின் மன நிலைமையாகும்.