வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Kavin: நெல்சனுக்காக பிச்சைக்காரனாக மாறிய கவின்.. டைட்டிலுடன் வெளியான ப்ரோமோ

Kavin: இந்த வருஷம் கவினுக்கு அமோகமாக இருக்கிறது. அடுத்தடுத்த படங்கள் கமிட் ஆகி வரும் நிலையில் அடுத்த சிவகார்த்திகேயன், அடுத்த தளபதி என்றெல்லாம் புகழப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நெல்சன் தயாரிப்பில் இவர் நடிக்க இருக்கும் படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் தற்போது அந்த வீடியோவை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளனர்.

கவினின் பிளடி பெக்கர்

வழக்கம்போல நெல்சன் காமெடி கலாட்டாவாக அந்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளார். சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிக்கும் அப்படத்தின் பெயர் பிளடி பெக்கர் ( bloody beggar) என்று வைக்கப்பட்டுள்ளது.

அதில் கவின் பரதேசி படத்தில் அதர்வா எப்படி ஆள் அடையாளம் தெரியாமல் இருப்பாரோ அதேபோன்று இருக்கிறார். பரட்டை தலையும், அழுக்கு மூஞ்சியும், கிழிந்த ஆடையும் என வேற லெவலில் இருக்கிறார்.

இதுவே ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ப்ரோமோவில் ரெடிங் கிங்ஸ்லி இந்த கெட்டப் பின்னாடி உனக்கு தேவைப்படும் என நெல்சனை கலாய்த்து இருப்பதும் சரியான காமெடியாக இருக்கிறது.

Trending News