செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வந்தாச்சு காவாலா முழு HD வீடியோ பாடல்.. அடுத்த வசூலுக்கு அடி போட்ட சன் பிக்சர்ஸ்

Jailer: சன் பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் ஜெயிலர் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் 635 கோடி வரை வசூலித்து இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே கலாநிதி மாறன் தற்போது ரஜினிக்கு 1.26 கோடி மதிப்பிலான BMW X7 காரை பரிசளித்தது மட்டுமல்லாமல் லாபத்தில் ஒரு பங்கையும் கொடுத்திருந்தார். அதேபோன்று அனிருத், நெல்சன் இருவருக்கும் 1.44 கோடி மதிப்புள்ள காரை வழங்கி ஒரு செக்கையும் கொடுத்து இருந்தார்.

Also read: வர்மனை ஃபேமஸ் ஆக்கிவிட்ட வாரிசு நடிகர்.. அந்த ரெண்டு படத்தில் நடித்ததால் விநாயகத்துக்கு அடித்த ஜாக்பாட்

இப்படி உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் சன் பிக்சர்ஸ் தற்போது அடுத்த வசூலுக்கும் அடிபோட்டு இருக்கிறது. அதாவது ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த காவாலா HD முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தில் முதல் பாடலாக வெளிவந்த இந்த காவாலா சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது. சிறுசு முதல் பெருசு வரை ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

Also read: சொப்பனத்துல கூட யோசிக்கல சாரே, முதல் முறையாக முகத்தை காட்டிய வர்மன்.. ரஜினியால் வெளியில தல காட்ட முடியல

அப்படிப்பட்ட இந்த பாடல் தற்போது வெளியான சில நிமிடங்களிலேயே ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த பாடல் பெரும் சாதனை செய்திருந்த நிலையில் தற்போது தமன்னாவின் ஆட்டம் யூடியூப் தளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

Trending News