Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மற்றும் காவிரி விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணி இருந்தாலும் போகப் போக இரண்டு பேரும் மனசிலும் காதல் மலர ஆரம்பித்து விட்டது. ஆனால் அதை வெளிப்படுத்தாமல் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுக் கொண்டதால் தற்போது இருவரும் பிரிந்து இருக்கும் படி ஒரு நிலைமை வந்துவிட்டது.
ஆனால் தன் பண்ணிய முட்டாள்தனத்துக்கு பரிகாரம் செய்யும் விதமாக காவிரி இருக்கும் இடத்திற்கு விஜய் குடி புகுந்து விட்டார். அத்துடன் கோபமாக இருக்கும் காவிரியின் அம்மாவையும் சாந்தப்படுத்தி காவிரியை கூட்டிட்டு போக வேண்டும் என்று பல விஷயங்களை செய்கிறார். அந்த விஷயங்கள் எல்லாம் காவேரி ரசிக்கும்படி இருந்தாலும் சாரதாவிற்கு கோபம் வந்துவிட்டது.
அதனால் நேரடியாக விஜய்யை பார்த்து பேசலாம் என்று காவேரி முடிவு பண்ணி விஜய் இருக்கும் வீட்டிற்கு வந்து விட்டார். வந்ததும் நீங்க ஏன் தேவை இல்லாமல் இங்கே இருந்து எங்களுடைய நிம்மதியை கெடுக்கிறீங்க என்று கேட்கிறார். நான் இங்கே உனக்காகத்தான் வந்திருக்கிறேன் என்று உனக்கு தெரியும், நான் செய்ற விஷயங்கள் அனைத்தும் நீ ரசித்து கொண்டு தான் இருக்கிறாய்.
அப்படி இருந்தும் என்னுடன் வருவதற்கு உனக்கு என்ன பிடிவாதம் என்று கேட்கிறார். அதற்கு காவிரி நீங்கள் செய்வது ரசிக்கும்படியாக இருந்தாலும் சில நேரங்களில் தொல்லையாகவும் இருக்கிறது. அதுவும் எங்க அம்மாவுக்கு உங்களை கண்டால் பயமாக இருக்கிறது. அவங்களுக்கு அவங்க பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து கவலை. அதனால் கொஞ்சமாவது அதை புரிந்து நடந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.
இப்படியே இவர்கள் இரண்டு பேரும் பேசிய நிலையில் விஜய் மற்றும் காவிரி மனதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் கொட்டி தீர்க்கும் விதமாக ஒருவரை ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள். உடனே விஜய் என்ன ஆனாலும் சரி நான் நீ இல்லாமல் போக மாட்டேன். நீ இல்லாத வாழ்க்கை என்னால் வாழ முடியாது. உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் தான் எனக்கு சந்தோசம் என்று சொல்லி என்னுடன் வந்துவிடு என காவேரியை கூப்பிடுகிறார்.
காவிரிக்கு மனசில் விஜய் உடன் போக வேண்டும் என்று ஆசை இருந்தாலும் சாரதாவிடம் கொடுத்த சத்தியத்திற்காக விஜய் கூட போகாமல் அம்மா உடனே இருக்கும்படி நிலைமை ஆகிவிட்டது. அது மட்டுமில்லாமல் சாரதா ரொம்பவே கோபத்தில் கொந்தளிக்கிறார், விஜய்யும் அதிகமாக திட்டி நோகடிக்கிறார். இவர்கள் இரண்டு பேருடைய வாழ்க்கையில் ராகினி தான் உள்ளே புகுந்து பிரச்சினை பண்ணுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சாரதா, ராகினியை விட வில்லியாக விஜய் மற்றும் காவிரியை கஷ்டப்படுத்தி வருகிறார்.