மகாநதி சீரியலில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் காவேரி.. பிளாஷ்பேக்கில் வரப்போகும் வெண்ணிலாவின் காதல் கதை

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில், காவிரி கர்ப்பம் என்ற விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை, விஜய் இடம் சொல்ல வேண்டும் என்ற ஆசையாக காத்துக் கொண்டிருந்த காவேரி, வெண்ணிலாவுக்கு சுயநினைவு வந்ததால் விஜய் இடம் கர்ப்பம் விஷயத்தை மறைத்து விடுகிறார்.

இருந்தாலும் அவ்வப்போது காவிரி வாந்தி எடுப்பதை வீட்டில் இருப்பவர்கள் பித்த வாந்தி என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் எவ்வளவு நாளைக்கு இதை மறைக்க முடியும் என்று பீல் பண்ணிய காவிரி எப்படியாவது விஜய் இடம் சொல்ல வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

விஜயும் காவிரியிடம் பேச வேண்டும் என்று வீட்டின் ஓனர் மூலம் தூது அனுப்பினார். அந்த வகையில் விஜய் மற்றும் காவிரி இருவரும் பேசிய நிலையில் காவிரி வெண்ணிலாவுக்கு சுயநினைவு வந்தது சந்தோசம். நம்மளுடைய கல்யாணத்தைப் பற்றி சொல்லிட்டீங்களா, அவங்களுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும்.

நம்முடைய கல்யாணத்தை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான் அடுத்த முடிவு எடுக்க முடியும் என்று விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு காவிரி, வெண்ணிலாவை பற்றி கேட்கிறார். அந்த வகையில் வெண்ணிலா விஷயம் ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் கர்ப்பமானதை சொல்ல வேண்டும் என்று உறுதியுடன் காவேரி இருக்கிறார்.

விஜயும் காவிரி சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு தாத்தா வீட்டிற்கு போய் வெண்ணிலாவே பார்க்க போவார். அதே நேரத்தில் வெண்ணிலா, விஜயுடன் பழகின காதல் விஷயத்தை பிளாஷ்பேக் மூலம் நினைத்துப் பார்க்கப் போகிறார். அதனால் இன்னும் ஒரு சில வாரங்கள் வெண்ணிலா விஜய் காதலித்த காட்சிகள் தான் வரப்போகிறது.

ஒரு பக்கம் காவேரி அம்மாவாகிட்ட சந்தோஷம் இருந்தாலும் இன்னொரு பக்கம் விஜய் வெண்ணிலா காதல் காட்சிகள் வரப் போகிறது. ஒருவேளை வெண்ணிலாவுக்கு உண்மை தெரிந்தால் கூட வெண்ணிலாவே காவேரி மற்றும் விஜயை சேர்த்து வைத்து விடுவார். ஆனால் அந்த உண்மை எப்படி யார் மூலம் தெரியப்போகிறது என்பதுதான் கொஞ்ச நாள் இழுவையாக இருக்கப் போகிறது.

Leave a Comment