Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் காவிரி ஒப்பந்தத்தின் படி ஒரு வருடம் கணவன் மனைவியாக கல்யாணம் பண்ணி இருந்தாலும் தற்போது இருவருக்குமே காதல் வந்துவிட்டது. ஆனால் அதை எப்படி எப்பொழுது சொல்வது என்று தெரியாமல் இருவரும் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு இடையில் காவிரியின் சந்தோஷத்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் விஜய் பார்த்து பார்த்து செய்து வருகிறார். அந்த வகையில் தாலி பெருக்கு பங்க்ஷன் வைத்து காவிரி குடும்பத்தையும் அழைத்து அனைவரையும் சந்தோஷப்படுத்தி விட்டார்.
இதனால் காவேரி சந்தோஷத்தில் இருந்தது மட்டுமில்லாமல் கங்காவும் கலந்து கொண்டதால் ரொம்பவே மகிழ்ச்சி ஆகிவிட்டார். ஆனால் இதையெல்லாம் கெடுக்கும் விதமாக பசுபதி மற்றும் ராகினி இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு காவிரிக்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள்.
பசுபதி இடம் சவால் விடும் காவிரி
அதே நேரத்தில் பசுபதி, காவிரியின் அம்மாவிடம் குதர்க்கமாக பேசிக் கொண்டிருந்த பொழுது விஜய் பார்த்து விடுகிறார். அப்பொழுது பசுபதியை மிரட்டி இந்த குடும்பத்தை உன்னால் ஒன்னும் பண்ண முடியாது என்று வார்னிங் கொடுக்கிறார்.
அடுத்து ராகினி, காவிரியை வெறுப்பேற்றும் விதமாக பேசுகிறார். நான் இந்த வீட்டிற்கு மருமகளாக வந்த பிறகு உன்னுடைய கெதி என்ன ஆகப் போகிறது என்று பார் என சவால் விடுகிறார். ஆனால் காவிரி இந்த வீட்டிற்கு நீ மருமகளாக வரவேண்டும் என்ற கனவு வெறும் கனவாகவே முடியப்போகிறது.
உனக்கும் அஜய்க்கும் கல்யாணம் நடக்காது அதை நான் நடத்த விட மாட்டேன் என்று சொல்கிறார். இதனைத் தொடர்ந்து பசுபதி நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாண விஷயமாக பேசுவதற்காக விஜய் வீட்டுக்கு வருகிறார். அடுத்து குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களிடம் எல்லா விஷயத்தையும் பேசிய பிறகு காவிரியை தனியாய் பார்த்து வம்பு இழுக்கிறார்.
அதற்கு அசராத காவிரி, ராகினிக்கு கல்யாணம் மட்டும் இல்லை நிச்சயதார்த்தம் கூட நடக்காது. உங்க ரெண்டு பேரின் கொட்டத்தையும் நான் அடக்கி காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார். காவிரி என்னதான் ஒப்பந்தப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் விஜய் பொருத்தவரை காவிரியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.
அந்த வகையில் காவிரி நினைக்கும் விஷயத்தை கமுக்கமாக இருந்து உதவுவது விஜய் தான். அதனால் காவேரி நினைக்கிற மாதிரி ராகினிக்கும் அஜய்-க்கும் கல்யாணம் நடக்காது.