செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

நவீனை படாதபாடு படுத்தும் காவேரி.. மச்சினிச்சி வாழ்க்கையை காப்பாற்றும் விஜய், ராகினி ஆடப்போகும் ஆட்டம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், பிடிவாதமாக நவீன் எனக்கு வேணும் என்று நினைக்கும் யமுனாவிற்காக காவேரி நவீன் வாழ்க்கையை வீணாக்க முடிவு பண்ணிவிட்டார். அதாவது என்னுடைய வாழ்க்கையில் விஜய் மற்றும் நவீன் தலையிட உரிமையில்லை என்று நினைக்கும் காவேரி, தங்கச்சி வாழ்க்கை என்றதும் நவீனிடம் கெஞ்சி கல்யாணம் பண்ணி வைப்பதற்கு தயாராகி விட்டார்.

அந்த வகையில் சுயநலத்தின் மறு உருவமாக காவேரி, நவீனை பார்த்து பேசுகிறார். அப்பொழுது யமுனா உங்களை ரொம்பவே லவ் பண்ணுகிறார். தூக்கத்தில் கூட உங்க பெயர் சொல்லி தான் புலம்புகிறார். நீங்க இல்லை என்றால் யமுனா வாழ்க்கை என்ன ஆகும் என்பது என்னால் யோசிச்சு கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு உங்க மேல் பைத்தியமாக இருக்கிறாள்.

காவிரி மற்றும் விஜய் சேர்ந்து நவீனுக்கு கொடுக்கும் டார்ச்சர்

இதற்கு ஒரே வழி நீங்கள் அவளை கல்யாணம் பண்ணினால் தான் சரியாகும் என்று நவீனிடம் கெஞ்சுகிறார். இதைக் கேட்டதும் நவீன் என்னால் முடியாது இந்த மாதிரி ஒரு நினைப்போடு என்னிடம் பேச வராதே என்று சொல்கிறார். ஆனாலும் காவேரி பிடிவாதமாக நவீனை விடுவதாக தெரியவில்லை. வீட்டிற்கு போன பிறகும் கூட நவீனுக்கு போன் பண்ணி நாளைக்கு உங்களுடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

பொன்னியம்மன் கோவிலுக்கு வந்து யமுனாவின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்று நவீனிடம் கெஞ்சி பேசுகிறார். இதைக் கேட்டதும் விஜய், யாரிடம் கால விழாத குறையாக கெஞ்சுகிறாய், இது ரொம்ப தேவையா? என்று கேட்கிறார். அதற்கு காவிரி, யமுனா வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் யார் காலில் வேண்டுமானாலும் விழத் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார்.

அத்துடன் நாளைக்கு தெரிந்து விடும், உண்மையும் உங்களுக்கு புரிந்துவிடும் என்று விஜய்க்கு ஒரு லீடு கொடுத்துவிட்டு போகிறார். அடுத்ததாக விஜய்யும், காவிரி மனதுக்குள் நவீன் இல்லை என்பதை யமுனா மூலம் தெரிந்து கொண்டார். அதே மாதிரி யமுனாக்கு நவீனை உன்னுடன் சேர்த்து வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்ததன் மூலம் அதை நிறைவேற்றுவதற்காக உள்ளே புகுந்து ஆடுபுலி ஆட்டம் ஆட போகிறார்.

ஆக மொத்தத்தில் விஜய் மற்றும் காவேரி யமுனாவின் சுயநலத்திற்காக பலிகாடாக சிக்கப் போவது நவீன் தான். இதற்கு பேசாமல் நவீன், ராகினியவே கல்யாணம் பண்ணியிருக்கலாம். ஆனால் நிச்சயம் காவேரி கேட்டுக் கொண்டதின்படி நவீன் யமுனாவை கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதம் தெரிவிக்கப் போகிறார். கடைசியில் காவிரி மற்றும் நவீன் டிராக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாச்சு என்று விஜய் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கப் போகிறார்.

ஆனால் இங்குதான் யாரும் எதிர்பார்க்காத ஒரு டுவிஸ்ட் ஏற்படப்போகிறது. அதாவது விஜய்யின் முன்னாள் காதலி வெண்ணிலா என்பதை தெரிந்து கொண்ட ராகினி, அஜய் மூலம் வெண்ணிலாவை கண்டுபிடித்து விடுவார்.

இது தெரியாத விஜய், காவேரியிடம் தன்னுடைய காதலை சொல்ல நினைக்கும் பொழுது ராகினி வெண்ணிலவை கூட்டிட்டு வந்து விஜய் கண் முன்னால் நிறுத்தப் போகிறார். இதனால் ரெண்டு கிட்ட நிலைமையில் இருக்கப் போகும் விஜய் எடுக்கப் போகும் முடிவு கேள்விக்குறியாக இருக்கும்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News