செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

மகாநதி சீரியலில் பிரிந்து போய் இருக்கும் காவேரி விஜய்.. 500 ஆவது சக்சஸ் மீட்டில் இயக்குனர் சொன்ன ரகசியம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ராகினி அனுப்பிய வீடியோவை பார்த்த காவேரி அம்மா, விஜய் கேரக்டரை தவறாக புரிந்து கொண்டு காவிரியிடம் இனி நீ அந்த பையனை நினைக்க கூடாது. இதையும் மீறி அவனுடன் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என்று பிளாக் மெயில் பண்ணி காவிரியின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டார்.

காவிரியும் அம்மாவிடம் எதுவும் சொல்லாமல் எல்லாத்துக்கும் ஓகே என்று சொல்லிவிட்டார். பிறகு ராகினி செய்த காரியத்திற்கு காவேரி, ராகினிக்கு போன் பண்ணி திட்டி நான் நினைத்தால் உன்னை அந்த வீட்டில் இருந்து விரட்ட முடியும். ஒப்பந்தத்தின்படி நாங்கள் கல்யாணம் பண்ணி இருந்தாலும் கணவன் மனைவியாக வாழ்வதற்கு எல்லா உரிமையும் என்னிடம் இருக்கிறது.

நான் நினைத்தால் அங்கே விஜயின் மனைவியாக மறுபடியும் வர முடியும். அப்படி மட்டும் நான் வந்துவிட்டால் உன் கதி என்ன ஆகும் என்று யோசித்துப் பாரு என்று வாய்க்கு வந்தபடி திட்டி விடுகிறார். காவிரி இவ்வளவு தெளிவாக சொல்வதை கேட்ட ராகினி பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போய் விடுகிறார். அப்பொழுது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத காவேரி அங்கே விஜயை சந்திக்கிறார்.

மனசு முழுவதும் காதலுடன் காவிரியை தேடி சிட்டுக்குருவி போல் விஜய் பறந்து வந்து விட்டார். வந்ததும் நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது உன்னையும் உங்க அம்மா மனசையும் மாற்றி கையோடு என்னுடன் கூட்டிட்டு போகும் வரை நான் இங்கேதான் இருப்பேன் என்று சொல்லிவிட்டார். அதற்கு காவிரி எதுவும் சொல்லாமல் உள்ளே போய் விடுகிறார். பிறகு சாரதாவும் விஜயை பார்த்த நிலையில் பயந்து போய்விட்டார்.

எங்கே காவேரி விஜயுடன் போய்விடுவாரோ என்ற பதட்டத்தில் காவிரியிடம் கோபமாக பேச ஆரம்பித்து விட்டார். உடனே காவிரி உன்னுடைய சம்மதம் இல்லாமல் நான் எதுவும் பண்ண மாட்டேன் என்று வாக்கு கொடுத்து விடுகிறார். இதனைத் தொடர்ந்து இவர்களுடைய சண்டை எப்பொழுது சரியாகி ஒன்று சேர்வார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் மகாநதி சீரியல் 500 எபிசோடு தாண்டிய நிலையில் மொத்த டீமும் சேர்ந்து இன்டர்வியூ கொடுத்திருந்தார்கள். அதில் இந்த சீரியலின் இயக்குனர் சொன்ன பதில் என்னவென்றால் கூடிய சீக்கிரத்தில் நான்கு குடும்பமும் ஒன்றாக சேர்வார்கள். ஆனால் அந்த காட்சிகள் இப்பொழுதே வந்துவிட்டால் நீங்கள் மகாநதி சீரியலை வெறுத்து விடுவீர்கள். அப்பொழுது இதை யாரும் பார்க்க ஆவல் இல்லாமல் மற்ற புது சீரியலுக்கு மாறிப் போய் விடுவீர்கள்.

அதனால் இப்போதைக்கு அந்த காட்சிகள் வர வாய்ப்பு இல்லை அப்படி வரும் பட்சத்தில் அது மகாநதி சீரியலின் முடிவாக தான் இருக்கும் என்று நேயர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அந்த வகையில் இப்போதைக்கு விஜய் மற்றும் காவிரியின் செல்ல சண்டைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்க போகிறது.

Trending News