மகாநதி சீரியலில் காவிரியின் கர்ப்பம், விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்.. சாரதாவின் வாயை அடைக்க வரப்போகும் குட்டி விஜய்

mahanadhi (22)
mahanadhi (22)

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், நர்மதா வயசுக்கு வந்த பிறகு அந்த பங்க்ஷனை சீரும் சிறப்புமாக எல்லோரும் சேர்ந்து நடத்துகிறார்கள். இதில் மாமன் என்கிற முறையில் தானும் சிறப்பாக பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் மேலதாளத்துடன் சீர்வரிசையை கொண்டு வருகிறார். ஆனால் விஜய்யின் செயல்கள் எதுவும் சாரதாவிற்கு பிடிக்கவில்லை.

இதனால் கோபத்தில் இருக்கும் சாரதா, விஜயை நர்மதாவிற்கு எந்த சடங்கும் பண்ண கூடாது என்று சொல்கிறார். அதற்கு நான் ஏன் பண்ண கூடாது குமரன் மாமன் சடங்கு செஞ்சாரு, நவீனும் அவர் பங்குக்கு செஞ்சிருப்பாரு, அப்படி என்றால் நானும் என்னுடைய பங்கு சீர் செய்யணும் என்று காவிரியை கூப்பிடுகிறார்.

ஆனால் சாரதா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லியதால் கோபப்பட்ட விஜய், அங்கு இருப்பவர்கள் அனைவரது முன்னிலையில் நான் உங்களுடைய மருமகன் என்னுடைய மனைவிதான் காவிரி என்று எல்லோருக்கும் தெரியப்படுத்தி விட்டார். பிறகு சாரதாவால் எதுவும் சொல்ல முடியாத காரணத்தால் விஜய் கொண்டு வந்த சீர்களை செய்துவிட்டு நர்மதாவுக்கு செயின் போட்டு விடுகிறார்.

ஆனாலும் சாரதா உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். இதையெல்லாம் சரி செய்யும் விதமாக காவிரிக்கு தற்போது அதிர்ச்சியான விஷயம் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது விஜய் மற்றும் காவிரியை ஒன்று சேர நேரம் வந்துவிட்டது. என்னதான் சாரதா கோபமாக இருந்தாலும் இனி ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப காவிரி கர்ப்பம் ஆகிவிட்டார்.

அந்த வகையில் குட்டி விஜய் வரும் நேரத்தில் சாரதா கோபத்தை கண்ட்ரோல் பண்ணி வாய் அடைக்கும் விதமாக இனி விஜயின் ஆட்டம் அதிரடியாக இருக்கப்போகிறது. காவிரியின் கர்ப்பம் விஷயம் தெரிந்தால் விஜய் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து சந்தோசத்தில் தலகால் புரியாமல் ஆடப்போகிறார். அத்துடன் இனி காவிரியை யார் நினைத்தாலும் விஜய்யிடம் இருந்து பிரிக்க முடியாது.

Advertisement Amazon Prime Banner