வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Andrea: கவின், வெற்றிமாறன் பஞ்சாயத்தை தீர்த்து வச்ச ஆண்ட்ரியா.. ஜெட் வேகம் எடுக்கும் மினி ஸ்டார்

கவினுக்கு ஸ்டார் படம் நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் நெகட்டிவ் ரிவ்யூ கூட அந்த படத்தின் பிரமோஷனுக்காக உதவியது. படத்தின் கதையை விட, கவினின் நடிப்பு பாராட்டப்பட்டது. இவருக்கு என்று இப்பொழுது ரசிகர்கள் கூட்டம் பெருகி வருகிறது.

ஏற்கனவே கவின் அதிக சம்பளம் கேட்கிறார் என ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவின் நான் ஓரளவு சம்பளத்தை உயர்த்தியது உண்மை தான், ஆனால் அவர்கள் சொல்லும் படி கோடி கணக்கில் எல்லாம் நான் கேட்கவில்லை என பதிலடி கொடுத்தார். தற்சமயம் கவின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறார்.

ஜெட் வேகம் எடுக்கும் மினி ஸ்டார்

லிப்ட், டாடா ஸ்டார் என அடுத்தடுத்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், ஓரளவு வளர்ந்து வரும் ஹீரோ என்ற பெயரை எடுத்து விட்டார் கவின். இப்பொழுது சரியான ஏறுமுக திசையில் இருக்கிறார் அடுத்தடுத்து பல இயக்குனர்கள் இவரை தேடி வருகிறார்கள். கிஸ் என்ற ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. பின் இருவருக்குள் ஏதோ சம்பள பிரச்சினை காரணமாக கவின் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இந்த பிரச்சனையால் அந்தப் படம். ட்ராப்பானது அதில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக இருந்தது.

இப்பொழுது மீண்டும் அந்த படம் டேக் ஆப் ஆகிறது. கவினிடம் ஆண்ட்ரியாவே பேசி இந்த படம் இருவருக்கும் நல்ல ஒரு டர்னிங் பாயிண்ட் கொடுக்கும். அதனால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் நடித்தால் நன்றாக இருக்கும் என பேசி இருக்கிறார். ஆண்ட்ரியா பேசியதால் கவின் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்.

Trending News