வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கிக்கான டைட்டிலுடன் களமிறங்கும் கவின்.. டாடாவா நடிச்சிட்டு இப்படி ஒரு படமா.!

சினிமாவில் கவினின் வளர்ச்சி கண்கூடாகவே பார்க்க முடிகிறது. டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு இவருடைய அடுத்த படத்தை நோக்கி பயணித்து வருகிறார். இவர் நடிக்கும் அடுத்த படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக முதன் முதலில் அறிமுகமாகிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

அடுத்ததாக இப்படத்திற்கான தலைப்பு மிஸ்கினிடம் உள்ளதால் இதை தெரிந்து கொண்ட கவின் மற்றும் இயக்குனர் சதீஷும் சேர்ந்து அவரிடம் கேட்டுள்ளனர். அவரும் இப்படத்திற்கான தலைப்பை தர சம்பாதித்து விட்டார். அதனால் இப்படத்திற்கான டைட்டில் கிஸ் என்று வைக்கப்பட்டுள்ளது. கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா படத்தில் யாருமே எதிர்பார்க்காத அப்பா கேரக்டரில் நடித்தார்.

Also read: 3 ஹீரோக்களின் இடத்தை பிடிக்கும் கவின்.. ஒரே ஹிட்டால் புரட்டிப்போட்ட சினிமா கேரியர்

அதனால் இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் படியாக அமைந்தது. அதில் ஒரு அப்பா கேரக்டரில் நடித்துவிட்டு உடனே இந்த மாதிரி ஒரு கிக்கான டைட்டிலுடன் களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் பார்க்கும் பொழுது படத்தின் கதை எப்படி இருக்கும் என்று ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

அப்படி என்றால் கண்டிப்பாக இப்படம் பெண்கள் மற்றும் காதலை சம்பந்தப்படுத்தி இருக்கும். அத்துடன் இளம் வயது சதீஷ் இப்படத்தின் இயக்குனர் என்பதால் அந்த வயசுக்கு ஏற்ற மாதிரி தான் கதையும் இருக்கும். அதே நேரத்தில் கவினும் எப்படி கேரக்டர் என்று அவர் பிக் பாஸில் இருப்பதை வைத்து நாம் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது.

Also read: கவின் முக்கியமல்ல, தனுஷ் தான் முக்கியம்.. சுயநலமாக பேசிய அப்பாவை லாக் செய்த அனிருத் 

அப்படி இருக்கையில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து போடும் கூட்டணி எந்த அளவுக்கு அமையப்போகிறதோ. அத்துடன் படத்தில் வேறு என்னெல்லாம் சீன் வைக்கப் போறாங்களோ. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைப்பதால் பாடல்கள் மூலம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. அத்துடன் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார். விஜய், தனுசுக்கு ஜோடியாக நடித்து தற்போது கவினுக்கு ஜோடியாக நடிக்க இருப்பது கவின் உடைய வளர்ச்சியை பார்க்க முடிகிறது. மேலும் இதன் மூலம் இவருடைய வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 3வது படத்திலேயே எகிறிய கவின் மார்க்கெட்.. விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய ஹீரோ

Trending News